தேனி பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து பெரியகுளத்திற்கு கூடுதல் பஸ் தேவை

தேனி பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து  பெரியகுளத்திற்கு கூடுதல் பஸ் தேவை
X

பைல்

தேனி பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து அல்லிநகரம் வழியாக பெரியகுளத்திற்கு கூடுதல் அரசு டவுன் பஸ்கள் இயக்க வேண்டும்.

தேனி நகராட்சி தேனி பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து அன்னஞ்சி விலக்கு வரை 4 கி.மீ., நீளத்தில் அமைந்துள்ளது. தேனி நகரின் 70 சதவீத குடியிருப்புகள் தேனி பழைய பஸ்ஸ்டாண்டில் இருந்து அன்னஞ்சி வரை ரோட்டின் இருபுறமும் அமைந்துள்ளன. இந்த இடைப்பட்ட 4 கி.மீ., தொலைவில் 10க்கும் மேற்பட்ட பஸ் நிறுத்தங்கள் உள்ளன. புதிய பஸ்ஸ்டாண்ட் தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை இந்த வழித்தடத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவது 99 சதவீதம் நிறுத்தப்பட்டுள்ளது.

எப்போதாவது ஒருமுறை டவுன் இயக்கப்படுகிறது. மினிபஸ்கள், மேக்ஸிகேப் வேன்கள் இயக்கப்பட்டாலும், பொதுமக்கள் பெரியகுளம் செல்லவோ, புதிய பஸ்ஸ்டாண்ட் செல்லவோ இரண்டு முதல் மூன்று முறை பஸ் மாற வேண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் நலன் கருதி தேனி- பெரியகுளம் இடையே இயக்கப்படும் டவுன் பஸ்கள் மற்றும் மொபசல் பஸ்களை மட்டுமாவது, தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து பங்களாமேடு, பழைய பஸ்ஸ்டாண்ட், அல்லிநகரம், பொம்மைய கவுண்டன்பட்டி வழியாக அன்னஞ்சி விலக்கு சென்று அங்கிருந்து பெரியகுளம் செல்லும் வகையில் இயக்க வேண்டும். பெரியகுளத்தில் இருந்து தேனிக்கு வரும் பஸ்களையும் இதே வழித் தடத்தில் இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
future ai robot technology