தூதர்ஸன் பொதிகையில் இனிமேல் சினிமா நிகழ்ச்சிகள், செய்திகள்!

தூதர்ஸன் பொதிகையில் இனிமேல் சினிமா நிகழ்ச்சிகள், செய்திகள்!
X
தூதர்ஸன் பொதிகை சேனலில் இனிமேல் சினிமா நிகழ்ச்சிகள், செய்திகள் அனைத்தும் ஒளிபரப்பாகும்.

மத்திய தகவல் தொடர்பு துறை இணையமைச்சர் எல்.முருகன், சென்னை சேப்பாக்கத்தில் செய்தியார்களை சந்தித்து தமிழகத்தில் மத்திய தகவல் தொடர்பு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய நடவடிக்கைகள் குறித்து தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: முன்பு அனைவரும் DD பொதிகை தொலைக்காட்சியில் ஒளியும் ஒலியும் பார்த்துக்கொண்டு இருந்தோம். தற்போது மீண்டும் DD பொதிகை தொலைக்காட்சியில் சினிமா நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளோம். ஜனவரி மாதம் 14 முதல் DD பொதிகையானது DD தமிழ் என பெயர் மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதே போல, எங்கள் DD நிருபர்கள் அடுத்ததாக களத்தில் இறங்கி செய்தி சேகரிக்க உள்ளனர். இனி அவர்களும், முதல்வர் முதல் அனைவரிடத்திலும் கேள்வி கேட்பர். இதற்காக வெளியில் இருந்து தற்போது ஆட்களிடம் பேசி வருகிறோம். விரைவில் நிரந்தரமாக ஆட்களை நியமிப்போம்.

பிரதமர் மோடி குறிப்பிட்டது போல இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிப்போம் என தூர்தஸன் பொதிகை சேனலில் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
ai in future agriculture