முல்லைப்பெரியாறில் இருந்து கேரளாவிற்கு 5 ஆயிரம் கனஅடி வெளியேற்றம்

முல்லைப்பெரியாறில் இருந்து கேரளாவிற்கு நீர் திறந்து விடும் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள்.
Mullaperiyar Water Level- கேரளாவில் தொடர்ந்து பலத்த மழை பதிவாகி வருகிறது. கேரளா முழுக்கவெள்ளக்காடாக மாறி உள்ளது. ஒட்டுமொத்த கேரளாவையும் ஒப்பிடும் போது, முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் மட்டுமே மழையும் குறைவு, நீர் வரத்தும் குறைவாக உள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையில் 61 மி.மீ., தேக்கடியில் 31.2 மி.மீ., மழை பெய்தது. அணைக்கு விநாடிக்கு ஏழு ஆயிரம் கனஅடி நீர் வரத்து உள்ளது. இதில் தமிழகப்பகுதிக்கு 2100 கனஅடி நீர் எடுத்தது போக, மீதம் உள்ள 5 ஆயிரம் கனஅடி நீர் (துல்லியமாக சொன்னால் 4900 கனஅடி நீர்) கேரளாவிற்கு திறக்கப்பட்டுள்ளது. ரூல்கர்வ் முறை அமலில் உள்ளதால் கூடுதலாக நீர் வந்தாலும் அது கேரளா வழியாகவே வெளியேற்றப்படும். தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் முகாமிட்டு நீர் வரத்தின் அளவுக்கு ஏற்ப கேரளாவிற்கு தண்ணீர் வெளியேற்றி வருகின்றனர்.
வண்டிப்பெரியாற்றின் அகலம், ஆழத்தை மதிப்பிடுகையில் வண்டிப்பெரியாறு ஆற்றில் விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் வந்தாலும் தண்ணீர் கரைகளை தாண்டி வெளியே வராது. அந்த அளவு பள்ளத்தை நோக்கி ஓடுகிறது வண்டிப்பெரியாறு. இந்நிலையில் இந்த ஆற்றில் செல்லும் பெரியாறு அணை தண்ணீர் மிக, மிக குறைந்த அளவு ஆகும்.
ஆனால் கேரள அரசு மக்களிடம் பதட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே தடியம்பாடு, கீரித்தோடு, பனங்குடி உள்பட 18 சிற்றாறுகளின் தண்ணீரையும் வண்டிப்பெரியாற்றில் திருப்பி விட்டுள்ளது. இந்த நீர் முழுக்க வண்டிப்பெரியாறு வழியாக இடுக்கி அணைக்கு செல்கிறது. இந்த 18 ஆறுகளின் வழியாக வரும் நீரின் அளவு பற்றி வெளியே சொல்லாமல், 'பெரியாற்றில் வரும் வெள்ளத்தை பாருங்கள்' என கேரளா ஒரு நாடகம் நடத்தி வருகிறது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu