கராச்சி முதல் கலிபோர்னியா வரை தலைவிரித்தாடும் வறுமை.. !

கராச்சி முதல் கலிபோர்னியா வரை  தலைவிரித்தாடும் வறுமை.. !
X

பைல் படம்

Poverty News -உலகில் 100 க்கும் மேற்பட்ட நாடுகள் பொருளா தார நெருக்கடியில் சிக்கி அங்கு வாழும் மக்களின் நிலைமை மிகவும் சிக்கலில் உள்ளது

Poverty News - பாகிஸ்தான், கராச்சியில் உள்ள ஒரு பெண் அழுகிறாள். .. வீட்டு மாத வாடகை ரூ.20,000, கரண்ட் பில் ரூ.16,000, ஒரு முட்டை விலை ரூ.20, காய்கறி, பால் விலை விண்ணை தொட்டு நிற்கிறது. அத்தியாவசிய பொருட்கள் விலை பல மடங்கு உயர்ந்து விட்ட காரணத்தால் குழந்தைக்கு மருந்து வாங்க கூட பணம் இல்லை..

பணம் கொடுத்தாலும் பெட்ரோல் கிடைப்பது குதிரை கொம்பு.. எவ்வளவு பணம் கொடுத்தாலும் பிளாக்கில் (கள்ளச் சந்தை) கூட கேஸ் சிலிண்டர் கிடைப்பதே இல்லை.. பாகிஸ்தானின் மக்கள் தொகை 45 கோடி.. அந்த மக்கள் தற்பொழுது மிகவும் நெருக்கடியினை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள்..

இலங்கையின் மக்கள் தொகை வெறும் 2 கோடி ஆனால் அந்த நாட்டில் பொருளாதாரம் முழுவதுமாக அழிந்து மக்கள் பெரும் சிரமத்தில் வீழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கே எல்லாம் இலவசம் என்று தமிழகம் போல கொடுத்து, அதையும் இன்னொரு வெனிசூலாவாக்கி வைத்தவர்கள் ராஜபக்சேக்கள். இயற்கை வளம் நிறைந்த அங்கே, எளிதாக சுற்றுலாவில் வருமானம் வந்ததால், உழைப்பாளர்கள் சோம்பேறிகள் ஆகி பால் கூட நியூசிலாந்தில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழல். இன்று அன்னிய செலாவணி இன்றி கண்ணீரில் வாடும் நிலை

உலகத்தை ஆண்ட பிரிட்டிஷில் இன்று 10 லட்சம் பேருக்கு மேல் தங்கள் பொருளாதார வீழ்ச்சியினால் ஒரு வேளை உணவை நிறுத்தி பசியில் வாழ வேண்டிய கட்டாயம். சமைக்க வாங்கும் கேஸ் இருக்கட்டும், கடும் குளிரில் இருந்து தப்பிக்க கேஸ் இல்லாத மோசமான சூழல். எல்லா பொருட்களும் விலை உயர்ந்து வாங்க முடியாத நிலை. ஒரு பக்கம் வேலை வாய்ப்பு இழப்பதும், மறுபக்கம் பண வீக்கம் 40 வருடங்களுக்கு பின் கட்டுக்கடங்காமல் போகிறது. அது ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளி வந்ததால் ஏற்படும் கூடுதல் சுமை அதை அதளபாதாலத்தில் வீழ்த்தும் சூழல். அதில் ஆட்சி செய்ய முடியாத சூழலில் ஒவ்வொரு அரசாக கவிழ்கிறது.

அமெரிக்காவில் 90 களுக்கு பிறகு முதல் முறையாக பண வீக்கம் இரட்டை இலக்கத்தை தொடும் சூழலில் உள்ளது. உணவு பொருட்கள் விலைவாசி ஒரு பக்கம் உயர, இதுவரை எவ்வளவு கொடுத்தாலும் முதல் தர உணவு எங்களுக்கு என்று டாலரை இஷ்டத்திற்கு பிரிண்ட் அடித்து ஆதிக்கம் செலுத்தி, ஆயுந்தங்களால் மிரட்டி வழிப்பறி செய்து வாங்கியவர்களுக்கு, இன்று கோதுமைகூட கிடைக்காமல் அதன் நிலை அந்தரத்தில் தொங்குகிறது. அதன் கடன் 32 ட்ரில்லியன் இருக்க, அடுத்து கடன் வாங்க வேண்டும், நேற்றுவரை போட்டி போட்டு முதலீடு செய்த காலம் போய் இன்று அங்கே முதலீடு செய்ய நாடுகள் தயாராக இல்லை. உலக நாடுகள் டாலரில் இருந்து வெளியேற, அதன் டாலர் டிமாண்ட் அதல பாதாளத்தில் விழுவதற்கான அறிகுறிகள் காண முடிகிறது, அதன் வீழ்ச்சிக்கான நாட்கள் வெகுதொலைவில் இல்லை.

ஆனால் அமெரிக்காவில் இருக்கும் இந்தியர்களுக்கு மட்டும் இந்த அளவிற்கு பாதிப்பு இல்லை. ஏனெனில் அவர்களைப் போல நாம் மூன்று வேளைகளும் ஹோட்டலில் சாப்பிடுவதும், ஒவ்வொரு விஷயங்களிலும் கடையில் வாங்கி காலம் தள்ளுபவர்கள் அல்ல. உணவு மற்றும் பல விஷயங்களை வீட்டில் சமைத்து கொள்வதால் பணவீக்கம் அதிகம் பாதிக்க வில்லை. அவர்களிடம் சேமிப்பு அதிகம் இருந்தும் வீடுகளில் முதலீடு செய்ததால், அங்கு வட்டி மிக அதிக அளவில் உயர்ந்து கையை கடிக்கிறது, ரியல் எஸ்டேட் வீழ தொடங்கிவிட்டது.

இந்த சூழலில், அமெரிக்காவில் பல நாடுகள் தங்களது டாலர் ரிசர்வை ஃபெடரல் பாண்டுகளில் முதலீடு செய்த நாடுகள், இன்று அதை வெளியே எடுக்க தொடங்கி விட்ட சூழலில், அந்த பாண்டுகளின் மதிப்பு பெருமளவில் சரியும். அது மேலும் அமெரிக்காவை பலவீனப் படுத்திவிடும். அதன் பொருளாதார வீழ்ச்சி அறிந்த பல நாடுகள் இன்று டாலரை கரன்ஸியாக பயன்படுத்துவதை தவிர்ப்பதால், அங்கே அது மேலும் வீழ்வதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

ஐரோப்பாவில் பல நாடுகள் ஏற்கனவே தள்ளாடிக்கொண்டிருந்த சூழலில் உக்ரைன் போரால் மேலும் மோசமாகி திவாலாகும் நிலை. ஜெர்மனி ஏற்கனவே பொருளாதார வீழ்ச்சியில் ரிஸசனில் விழுந்து விட்டது. ஆனால் பிரான்ஸ், இத்தாலி, துருக்கி போன்ற நாடுகள் அமெரிக்காவிற்கு ஆமாம் சாமி போடுவதை நிறுத்தி விட்டு, தன் பிழைப்பை தக்கவைத்துக்கொள்ள தடை போட்ட ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தங்களை போடுகிறது. அதற்கு பிள்ளையார் சுழி போட்டது இந்தியா.

ஆஃப்ரிக்காவில் பல நாடுகள் சீனாவின் கடன் சுமையால் தத்தளிக்கும் சூழல். வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாத சூழலில், சீனாவின் நிர்பந்தத்திற்கு ஆளாகும் வறுமை. ஆனால் கடன் கொடுத்த சீனாவோ அதை விட மோசமான சூழல். கொடுத்த கடனை யாரும் திருப்பி கொடுக்காத நிலையில் அதன் அளவுக்கு மீறிய முதலீடுகள் டெட் இன்வெஸ்ட்மெண்ட் ஆகி பயம் காட்டுகிறது. பல ட்ரில்லியன்களில் Belt & Road Intiative மூலம் இணைக்கும் ப்ராச்ஜக்ட், மேலும் நிதியளிப்பு இல்லாததால் வீழ்கின்ற நிலை. இந்த சூழலில் உள் நாட்டில் மக்கள் கிளர்ச்சி, தைவான் பிரட்சினை என்று அதுவும் வீழ்ச்சியில். உலகமே கொரானா பிடியில் இருந்து வெளிவந்த பின்னும், தான் செய்த வினையால் லாக்டவுனால் தடுமாறி தவிக்கிறது. அதன் தொழில்கள் சீனாவை விட்டு இந்தியாவை நோக்கி செல்கிறது. ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்த பணத்தால் திவாலாகி நிற்கும் ஆறு பெரிய வங்கிகள், அதில் அதிக வட்டி என்று முதலீடு செய்த மக்கள் நடுத்தெருவில் நின்று போராடுகிறார்கள்.

இன்னும் பல உலக நாடுகளில் சுமார் 75 முதல் 100 நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அரேபிய நாடுகள் தங்கள் கச்சா எண்ணெய் தீர்ந்தால் பிச்சை எடுக்க வேண்டிய சூழலில், மாற்று வாழ்வாதார ஏற்பாடுகளை செய்ய முயற்சிகள் செய்ய, அதற்குள் உலக பொருளாதாரமும், உணவு பஞ்சமும் ஒரு பக்கம் வாட்டி வதைக்க, மறுபக்கம் ரஷ்யா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் விற்று அதற்கு தடையை ஏற்படுத்தி விட்டது. வரும்காலம் எலெக்ட்ரிக் உலகம் என பயம் காட்டுகிறது. அது கடவுள் கொடுத்த கச்சா எண்ணெயை வைத்து மதம் பிடித்து செய்த செயல்களுக்கு. முடிவுரை, முன்னுரை ஆகிவிட்டது

இதில் சீனாவிடமும், இந்தியாவிடனும் ரெட்டை குதிரை சவாரி செய்த இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் என்று ஒன்றன்பின் ஒன்றாக வருமையின் பிடியில் வீழ்கிறது. இப்படி உலகில் 100க்கும் மேற்பட்ட நாடுகள் கடும் நெருக்கடியில் தவிக்கும் நிலையில். இந்தியாவில் நிலைமை மிகவும் திடமாக உள்ளது. நாடு வலுவான நிலையில் வளர்ந்து வருகிறது என மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
மாணவிக்கு பாலியல் தொல்லை: கைதான அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்