தேனி தனியார் கல்லுாரியில் வெள்ளிவிழா விழிப்புணர்வு ஊர்வலம்

தேனி தனியார் கல்லுாரியில் வெள்ளிவிழா விழிப்புணர்வு ஊர்வலம்
X

தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரி சார்பில் வெள்ளிவிழா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரி சார்பில் வெள்ளிவிழா விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

தேனி நாடார் சரஸ்வதி கலை, அறிவியல் கல்லுாரியின் 25வது வெள்ளிவிழாவை முன்னிட்டு இன்று தேனியில் நடந்த கல்வி விழிப்புணர்வு ஊர்வலத்தை எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே தொடங்கி வைத்தார். 20க்கும் மேற்பட்ட அலங்கார ஊர்திகள் ஊர்வலத்தில் வந்தன. உறவின்முறை பொதுச்செயலாளர் ராஜமோகன், தலைவர் முருகன், பொருளாளர் பழனியப்பன், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள், கல்லுாரி தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நாடார் உறவின்முறை நிர்வாகிகள், பள்ளி கல்லுாரி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் ஊர்வலத்தில் வந்தனர். தேனி பாரஸ்ட் ரோட்டில் தொடங்கிய ஊர்வலம், மதுரை ரோடு, பெரியகுளம் ரோடு வழியாக வந்து மீண்டும் பள்ளியை அடைந்தது.

கல்வி, சமூகம், பொருளாதார், இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வ, பாலீதீன் விழிப்புணர் ஏற்படுத்தும் வகையில் 20 வாகனங்கள் ஊர்வலத்தில் வந்தன. மாணவ, மாணவிகள் இயற்கையை பாதுகாக்கவும், பாலீதீனை ஒழிக்கவும் மக்களை அறிவுறுத்தும் வகையில் மஞ்சப்பை கொண்டு சென்றனர். தொடர்ந்து வரும் ஏப்., 25ம் தேதி திங்கள் கிழமை கல்லுாரியில் வெள்ளிவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

Tags

Next Story