60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உதவி செய்ய இலவச சேவை மையம்

60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு  உதவி செய்ய இலவச சேவை மையம்
X
60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உதவி செய்ய இலவச சேவை மையம் மத்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது.

இந்திய அரசு 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து சீனியர் சிட்டிசன்களுக்கும் உதவும் வகையில் இலவச கைபேசி எண் 14567 என்ற திட்டத்தை அறிவித்துள்ளது. அதில் தொடர்பு கொண்டால் அவர்கள் பேசும்போது நமக்கு என்ன குறை என்று கேட்கிறார்கள். வயதானவர்களை பெற்ற பிள்ளைகள் சரிவர கவனிப்பதில்லை என்ற குறையா அல்லது மருத்துவ ரீதியான குறையா அல்லது ஓய்வூதியம் பெறுவதற்கான ஏதாவது தடை உள்ளதா வங்கி சம்பந்தப்பட்ட நிர்வாகம் ஏதாவது குறை இருப்பின் கூறுங்கள் என்று கேட்கிறார்கள்.

இந்த சேவை மையம் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை குறைதீர்க்கும் மையமாக மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மூத்த குடிமக்களுக்கு ஒரு வழிகாட்டியாக அல்லது எங்கு சென்றாலும் நிதானமாகவும் பாதுகாப்பாகவும் செல்லக்கூடிய இடங்களுக்கு செல்ல முடியாமல் விட்டால் மேற்கண்ட எண்ணான 14567 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கூறினால் முதியவர்களுக்கு எந்தவித கஷ்டமும் இல்லாமல் ஒரு பெரிய வழிகாட்டியாக நமது உயிருக்கு பாதுகாப்பாக ஏற்பாடுகளை அனைத்து மூத்த குடிமக்களுக்கும் மத்திய அரசு செய்துள்ளது.

இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சேவை மையம் ஆகும். அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளவும். எந்த வேலைக்கும் எந்த அச்சமும் இன்றி நம்முடன் எப்பொழுதும் ஒரு உதவியாளர் இருப்பது போல் இந்த மத்திய அரசின் சேவை மையம் செயல்பட்டு வருகிறது. நீங்கள் இலவச அழைப்பு எண் 14567 யாரும் மறக்க வேண்டாம் என்று அனைத்து மூத்த குடிமக்களுக்கும் அரசு அறிவித்துள்ளது.

இந்த திட்டம் குறித்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சற்று முன்பு இந்த நம்பரில் தொடர்பு கொண்டு பேசினேன். எதிர்முனையில் பேசிய பெண்மணி என்னிடம் பெயர், ஊர், விலாசம் கேட்டார்கள். என்னகுறை என்று கேட்டபோது எனக்கு நான்குமாத டி.ஏ. அரியர் கிடைக்கவில்லை என்றேன் எங்குவேலை செய்து ஓய்வு பெற்றீர்கள் என்று கேட்டபோது எல்லாவிபரத்தையும் சொன்னே். நாளைகாலையில் அவர்களுடைய டீம் நேரடியாக SBI JIPMER BRANCH க்கு போய் விசாரனை செய்து நடவடிக்கை எடுப்பதாக சொன்னார்கள். உடல்நலம் பற்றியும் உடம்பில் வேறு ஏதாவது குறைபாடுகள் இருந்தால் சொல்லுங்கள் உதவி செய்கிறோம் என்றும் அன்புடன் கேட்டார்கள்.

உங்கள் பிள்ளைகள் உங்களை கவணித்துக்கொள்கிறார்களா? அருகில் இருக்கிறார்களா? தூரத்தில் இருக்கிறார்களா? என்று மிகஅக்கறையுடன் விசாரித்தார்கள்? எந்தகுறையிருந்தாலும் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். இந்த முதியோர் குறைதீர்க்கும் மையத்தை மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படுத்தி வருகின்றன என்று சொன்னார்கள்.

இவ்வாறு கூறினார்.

ஆதலால் முதியவர்கள் தங்களுக்கு ஏதாவது குறையிருந்தால் இந்த 14567 எண்ணை தொடர்பு கொள்ளலாம்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!