தேனி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில் இலவச பொது மருத்துவ முகாம்
தேனியில் நடந்த இலவச பொதுமருத்துவ முகாமினை பா.ஜ., நிர்வாகிகள் சிவக்குமரன், கே.கே.ஜெயராமன் இணைந்து
குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். ஸ்டெதஸ்கோப் அணிந்து நிற்பவர் டாக்டர் மு.காமராஜன்.
தமிழக பா.ஜ.க.வின் கூட்டுறவுப்பிரிவு மாநில செயலாளர் சிவக்குமரன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் கே.கே.ஜெயராமன் ஆகியோர் இணைந்து பிரதமர் மோடியின் 72வது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில் தேனி கிட்னி மற்றும் சர்க்கரை நோய் மையத்துடன் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடத்தினர். தேனி 15வது வார்டு நியூஸ்ரீராம் நகரில் நடந்த இந்த முகாமிற்கு கூட்டுறவுப்பிரிவு மாவட்ட தலைவர் பழனிக்குமார், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் கே.கே.ஜெயராமன் முகாமிற்கு தலைமை வகித்தனர். நகர கூட்டுறவு பிரிவு தலைவர் ரமணன், மாநில செயலாளர் சிவக்குமரன் முன்னிலை வகித்தனர்.
நிர்வாகிகள் மதிவாணன், ஆர்.பி.ரமேஷ், சிவானந்தன், சிவசங்கரன், சிவக்குமார், சந்தீப், வினோத்குமார், திருப்பதி நாடார் உட்பட பலர் பங்கேற்றனர். தேனி கிட்னி மற்றும் சர்க்கரை நோய் மைய சிறப்பு டாக்டர் மு.காமராஜன் எம்.டி., (நெப்ராலஜி) தலைமையிலான மருத்துவக்குழுவினர் நோயாளிகளுக்கு பல்வேறு பரிசோதனைகளை நடத்தி இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கினர். தொடர் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவச மருத்துவ காப்பீட்டு திட்டங்களின் மூலம் சிகிச்சை அளிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளது என பா.ஜ. நிர்வாகிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu