இலவச மினரல் வாட்டர், ரூ.10க்கு சிகிச்சை சுயே., வேட்பாளருக்கு குவியும் ஆதரவு

இலவச மினரல் வாட்டர், ரூ.10க்கு சிகிச்சை சுயே., வேட்பாளருக்கு குவியும் ஆதரவு
X

தேனியில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள் சுயே., வேட்பாளர் வி.ஆர்.,ராஜனை சந்தித்து தங்களது ஆதரவையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

இலவச மினரல் வாட்டர், பத்து ரூபாய் மருத்துவம் போன்ற வாக்குறுதிகளை கொடுத்த சுயே., வேட்பாளருக்கு சமூக அமைப்புகளும், சங்க நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தேனி நகராட்சி நான்காவது வார்டு சுயே., வேட்பாளர் வி.ஆர்.,ராஜன். தென்னைமரச் சின்னத்தில் போட்டியிடும் இவர், தான் வெற்றி பெற்றால், வார்டு மக்களுக்கு சொந்த செலவில் தேவையான அளவு மினரல் வாட்டர் சொந்த செலவில் சப்ளை செய்வேன். 10 ரூபாய்க்கு மருத்துவ சிகிச்சை அளிப்பேன்.

மாணவ, மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட் டியூசன் சென்டர் அமைப்பேன். வார்டு முழுக்க கண்காணிப்பு கேமரா பொறுத்தி ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை அமைப்பேன் என பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து வருகிறார்.

நேற்று வரை தனியாக சென்று மக்களை சந்தித்தார். இன்று வரை தேனியில் உள்ள பல்வேறு சமூக அமைப்புகளின் தலைவர்கள் சந்தித்தனர். குறிப்பாக இன்று சமூக நல்லிணக்க பேரவை தலைவர் முகமதுசபி, ஜெய்பீம் புரட்சிபுலிகள் அமைப்பின் தலைவர் அருந்தமிழ்அரசு, ஜமாத்தே இஸ்லாமி தேனி வட்ட தலைவர் அபுதாஹீர்ராஜா, ஏகத்துவ முஸ்லீம்ஜமாத் தேனி ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு கிறிஸ்தவ மக்கள் நல பேரமைப்பு தலைவர் சம்மட்டி நாகராஜன், தேசிய முன்னாள் ராணுவவீரர்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் மாநில தலைவர் சுபேதார் மகாராஜன், தமிழ்நாடு மக்கள் ஜனநாயககட்சியின் மாவட்ட செயலாளர் ஷேக்முகமது உட்பட பலர் சுயேட்சை வேட்பாளர் வி.ஆர்.,ராஜனை சந்தித்தனர்.

தனது வாழ்த்துக்களை தெரிவித்த அவர்கள், 'உங்களின் தேர்தல் வாக்குறுதிகள் மிகவும் சிறப்பாக உள்ளது. நீங்கள் வெற்றி பெற்றால் நல்லது. எனவே நாங்களும் உங்களுக்காக தேர்தல் பணியாற்ற முன்வருகிறோம்' எனக்கூறி ஆதரவு தெரிவித்தனர்.

அனைவரையும் வரவேற்ற சுயே., வேட்பாளர் ராஜன், தான் தென்னை மரச்சின்னத்தி்ல் தேனி நகராட்சி 4வது வார்டில் நிற்பதாகவும், தாங்கள் ஆதரவு திரட்டித்தர வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்தார்.

Tags

Next Story
ai in future education