தேனி அருகே தப்புக்குண்டு கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்

தேனி அருகே தப்புக்குண்டு கிராமத்தில் இலவச மருத்துவ முகாம்
X

தேனி அருகே தப்புக்குண்டு கிராமத்தில் நடந்த இலவச மருத்துவ முகாமில் நலம் மருத்துவமனை டாக்டர்கள் சுபின், டினோ பொதுமக்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

தப்புக்குண்டு கிராம ஊராட்சியும், தேனி நலம் மருத்துவமனையும் இணைந்து தப்புக்குண்டில் இலவச மருத்துவ முகாம் நடத்தினர்.

தேனி அருகே தப்புக்குண்டு கிராம ஊராட்சியில், நலம் மருத்துவமனை சார்பில் பொது மற்றும் சர்க்கரை நோய் மருத்துவ முகாம் நடைபெற்றது.

தப்புக்குண்டு கிராம ஊராட்சி நிர்வாகமும், தேனி நலம் மருத்துவமனை நி்ர்வாகமும் இணைந்து இந்த முகாமினை நடத்தினர். இந்து நாடார்கள் உறவின்முறை சொத்து பாதுகாப்புக்குழு செயலாளர் கே.கே.ஜெயராமன் முகாமினை ஒருங்கிணைத்து நடத்தினார்.

ஊராட்சி முன்னாள் தலைவர் ஈஸ்வரன், வெள்ளாஞ்செட்டியார் உறவின்முறை தலைவர் முருகன், தப்புக்குண்டு கிராம ஊாராட்சி தலைவர் பழனிராஜ், கிராம முக்கிய பிரமுகர் காண்டீபன், வார்டு உறுப்பினர் மனோரஞ்சிதம் உட்பட பலர் பங்கேற்றனர். நலம் மருத்துவமனை டக்டர்கள் சுபின், டினோ ஆகியோரும், 10க்கும் மேற்பட்ட செவிலியர்கள், மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் முகாமினை நடத்தினர்.

முகாமில் மொத்தம் 211 பேர் பங்கேற்று டாக்டர்களிடம் மருத்துவ ஆலோசனை பெற்றனர். பங்கேற்ற அனைவருக்கும் 10க்கும் மேற்பட்ட மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக செய்யப்பட்டு, பலவித நோய்களுக்கு மருத்துவ ஆலோசனையும், வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!