தேனி காமராஜர் மருத்துவமனையில் இலவச பொது மருத்துவ முகாம்

தேனி காமராஜர் மருத்துவமனையில் இலவச பொது மருத்துவ முகாம்
X

தேனி சமதர்மபுரம் காமராஜர் மருத்துவமனையில், நடந்த இலவச பொது மருத்துவ முகாமில், நாடார் உறவின்முறை தலைவர் ராஜ்மோகன் அண்ணாச்சி (நடுவில் நிற்பவர்) உட்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தேனி சமதர்மபுரத்தில் உள்ள காமராஜர் மருத்துவமனையில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.

தேனி, மேலப்பேட்டை இந்து நடார் உறவின்முறை சார்பில் சமதர்மபுரத்தில் காமராஜர் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு 50 ரூபாய் ஆலோசனை கட்டணத்தில் (பிற இடங்களில் குறைந்தபட்சம் 200 ரூபாய், மற்றும் 500 ரூபாய், 600 ரூபாய் அதிகபட்சமாக 800 ரூபாய் வரை ஆலோசனை கட்டணம் வாங்குகின்றனர்.) நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இங்கு வாங்கப்படும் மருந்துகளுக்கும் 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை விலையில் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இங்குள்ள பரிசோதனைக்கூடங்களிலும், நோய் தன்மை குறித்து பரிசோதனைகள் செய்ய 50 சதவீதம் சலுகை கட்டணம் வழங்கப்படுகிறது.

இந்த மருத்துவமனையில் இலவசமாக நோய் கண்டறிதல் மற்றும் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறையும், சமதர்மபுரம் நாடார் சங்கமும் இணைந்து இந்த முகாமினை நடத்தினர். சமதர்மபுரம் நாடார்கள் முன்னேற்ற சங்க தலைவர் ஆர்.மருதபாண்டி தலைமை வகித்தார். தொழிலதிபர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார்.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை தலைவர் டி.ராஜ்மோகன் அண்ணாச்சி, நகராட்சி கவுன்சிலரும் தி.மு.க., நகர செயலாளருமான என்.சி.நாராயணபாண்டி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். மேலப்பேட்டை நாடார் உறவின்முறை துணைத்தலைவர் பி.பி.கணேஷ், ஆட்சிமன்றக்குழு உறுப்பினர் கே.கே.ஜெயராம் நாடார் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

டாக்டர்கள் பிரபாகரன், சேர்மராஜன், ஜெயக்குமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் நோயாளிகளை பரிசோதித்து, இலவச மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கினர். முகாமில் ஏராளமானோர் பங்கேற்று மருத்துவ ஆலோசனை பெற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்