எஸ்.ஐ., தேர்வு எழுதுபவர்களுக்கு தேனியில் இலவச பயிற்சி வகுப்பு
பைல் படம்.
இதுகுறித்து தேனி கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான 621 காலிப்பணியிடங்களுக்காக தேர்வு அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட்-2023 மாதத்தில் எழுத்துத் தேர்வு நடைபெறவுள்ளது. தற்போது தேர்வாணையம் அறிவித்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பதாரர்கள் www.tnsurb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 01.06.2023 முதல் 30.06.2023வரை விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் சிறந்த வல்லுநர்களை கொண்டு விரைவில் துவங்கப்பட உள்ளது. அதன்பொருட்டு, இத்தேர்வுக்கென வரையறுக்கப்பட்ட பாடத்திட்டத்திற்கு ஏற்ப ஒவ்வொரு பாடத்திற்கும் சிறந்த வல்லுநர்கள் வகுப்புகளை எடுக்கவுள்ளனர். இப்பயிற்சியின் போது இலவச பாடக்குறிப்புகள், ஒவ்வொரு பாடத்திற்கும் மாதிரி தேர்வுகள், வினாடி வினா மற்றும் குழு விவாதங்களும் சிறப்பாக நடத்தப்படும்.
அது சமயம், தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணைய சப்-இன்ஸ்பெக்டர் (SI) தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய விண்ணப்பதாரர்கள் இவ்வலுவலகத்தில் (எம்ப்ளாய்மெண்ட்) விரைவில் துவக்கப்பட உள்ள நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயனடையலாம். மேலும், இப்பயிற்சி வகுப்புகளில் சேருவது தொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு சந்தேகம் ஏதும் இருப்பின் தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலரை நேரிலோ 04546-254510 என்ற தொலைபேசி அல்லது 6379268661 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu