தேனியில் செல்போன் பழுது நீக்கும் இலவச பயிற்சி டிச.8ம் தேதி தொடக்கம்

தேனியில் செல்போன் பழுது நீக்கும் இலவச பயிற்சி டிச.8ம் தேதி தொடக்கம்
X
தேனியில் கனரா வங்கி சார்பில் ஒரு மாதம் செல்போன் பழுது நீக்கும் இலவச பயிற்சி நடக்கிறது.

தேனி தாலுகா அலுவலகம் எதிரில் (உழவர்சந்தை எதிரில்) இயங்கி வரும் கனரா வங்கியின் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் 30 நாள் நடைபெறும் இலவச செல்போன் சர்வீஸ் பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.

வரும் டிசம்பர் 8ம் தேதி பயிற்சி தொடங்குகிறது. தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி நடக்கும். பயிற்சி கட்டணம் இல்லை. பயிற்சியின் போது பயிற்சிக்கான உபகரணங்களும் காலை, மதிய உணவும் இலவசமாக வழங்கப்படும்.

முடிவில் சான்றிதழ் மற்றும் தொழில் தொடங்க வங்கி கடன் வசதி செய்து தரப்படும். கூடுதல் தகவல்களுக்கு 04546-251578, 8190922599, 9500314193, 9442758363, 8870376796, 8344406777 என்ற நம்பர்களில் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம், முன்பதிவும் செய்து கொள்ளலாம்.

Tags

Next Story