பெரியகுளம் அருகே வேன் கவிழ்ந்து சபரிமலை பக்தர்கள் 14 பேர் காயம்

பெரியகுளம் அருகே வேன் கவிழ்ந்து சபரிமலை பக்தர்கள் 14 பேர் காயம்
X

பைல் படம்.

பெரியகுளம் அருகே மகரஜோதி பார்த்து விட்டு தேனி மாவட்டம் வழியாக ஈரோடு திரும்பிய பக்தர்கள் 14 பேர் சென்ற வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

ஈரோடு காந்திநகரை சேர்ந்தவர் லோகநாதன், 25. இவரும் இவரது, நண்பர்கள் உறவினர்கள் என 14 பேர் சபரிமலைக்கு சென்றனர். மகரஜோதி தரிசனம் முடித்து விட்டு, தேனி மாவட்டம் வழியாக ஈரோடு திரும்பிக் கொண்டிருந்தனர். டிரைவர் விஸ்வநாதன் வேனை ஓட்டி வந்தார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே வடுகபட்டி வெள்ளைகட்டினை வேன் கடந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் விளைநிலங்களுக்குள் புகுந்து கவிழ்ந்தது. இதில் வேனில் வந்த பக்தர்கள் 14 பேரும் காயமடைந்தனர். இவர்கள் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் சொந்த ஊர் புறப்பட்டனர். பெரியகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!