தேனி மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

தேனி மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா விற்ற 4 பேர் கைது
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் பல இடங்களில் கஞ்சா விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், முழுவதும் போலீசார் கஞ்சா விற்பனை தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஆண்டிபட்டி டி.ராஜகோபாலன்பட்டி, போடி, சின்னமனுார், சீலையம்பட்டி பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அந்த பகுதிகளில் கஞ்சா விற்ற அஜித்குமார், 21, அஜீத்பாண்டியன், 22, குமரேசன், 37, அப்துல்லா, 60 ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. நான்கு பேரும் எங்கு கஞ்சா வாங்கி விற்கின்றனர் என்ற விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai tools for education