ஊழல் வழக்கில் சிக்குவாரா முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஊழல் வழக்கில்  சிக்குவாரா முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
X

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி(பைல் படம்)

Edappadi Palaniswami -ஓபிஎஸ் டீம் கையில் எடுத்துள்ள ஒரு மேட்டருக்கு ஆதரவாக சசிகலா டீம் களமிறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது

Edappadi Palaniswami -எடப்பாடி பழனிசாமிக்கு தற்சமயம் குடைச்சலை தரக்கூடிய செய்தி அநேகமாக இதுவாகத்தான் இருக்கும் என்கிறார்கள். இந்த முறை 10 முதல் 15 எம்பி சீட்டுகளையாவது பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது. அதற்காகவே அதிமுகவின் இணக்கத்தை விரும்புகிறது.

கடந்த சில மாதங்களாகவே, அதிமுகவின் உள்கட்சி விவகாரங்களில் பாஜக தலையிடாத நிலையில், தற்சமயம், இவர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக மறைமுக அழுத்தங்களை கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

பாஜக இந்த விஷயத்தில் தலையிடத்தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் மீடியாக்களில் கசியத் தொடங்கியது. இதே வேளையில், ஓபிஎஸ் டெல்லிக்கு செல்வதாகவும், பிரதமர் மோடி, அமித்ஷா இருவரையும் சந்தித்து பேசப் போவதாக வைத்திலிங்கம் பேட்டி அளித்தார். ஆனால், இதுவரை ஓபிஎஸ் -சின் டெல்லி பயணம் எப்போது என்று உறுதியாகத் தெரியவில்லை. இச்சூழலில், தொண்டர்கள் ஆதரவு இருக்கிறதோ இல்லையோ, கட்சியின் 95 சதவீத ஆதரவை எடப்பாடி பழனிசாமி பெற்றிருப்பது மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ளவர்கள் ஏராளமாக இருப்பது பாஜக மேலிடத்துக்கு தெரிந்தாலும், அவ்வளவு சீக்கிரம் எடப்பாடி பழனிசாமியை ஒதுக்கிவிடாது என்றும் சொல்லப்படுகிறது. எடப்பாடி விஷயத்தில், பாஜக மேலிடம் வெளிப்படையாக வெறுப்பையும் , எதிர்ப்பையும் வெளிக்காட்டாத நிலையில், இது ஓபிஎஸ் தரப்புக்கு அதிர்வை தந்துள்ளது. அதனால்தான், வேறு ஒரு ரூட்டை அவர் கையில் எடுத்ததுள்ளார்.

ஊழல் முறைகேடு என்றாலே பாஜகவின் கண்கள் சிவந்து போய்விடும் என்பதால், அந்த ரூட்டிலேயே சென்று, எடப்பாடி மீதான அதிருப்தியை வெளிச்சம் போட்டுக்காட்ட முடிவு எடுத்ததாகத் தெரிகிறது..

அதனால்தான், எடப்பாடி பழனிசாமியின் ஊழல் விவகாரங்களை, ஓ.பி.எஸ்., டீம் பகிரங்கப்படுத்த தொடங்கி உள்ளது. அதன்படியே, ஜேசிடி பிரபாகர் திடீரென எடப்பாடியின் ஊழல் குறித்த விஷயத்தை வெளிப்படையாக போட்டு உடைத்தார். எடப்பாடி பழனிசாமியின் 41 ஆயிரம் கோடி ரகசியத்தை ஓ.பி.எஸ். அனுமதித்தால் வெளியிடுவேன் என்று ஜே.சி.டி. பிரபாகரன் தெரிவித்திருந்தார். இது அதிமுகவில் மட்டுமல்ல, தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதற்கு எதிர் வினையாற்றிய எடப்பாடி பழனிச்சாமி, ஜேசிடி.பிரபாகரன் வேடந்தாங்கல் பறவை போல.. அவர் அதிமுககாரர் இல்லை என்று அதிரடியாக அறிவித்தார்.

ஆனாலும், இந்த விஷயத்தை லேசில் விடக்கூடாது என்பதுதான் ஓபிஎஸ் டீமின் எண்ணமாக உள்ளதாம்.. இப்படிப்பட்ட சூழலில்தான், சசிகலா டீம் சப்தமில்லாமல் உள்ளே நுழைந்துள்ளது. எடப்பாடிக்கு எதிரான இந்த ஊழல் விவகாரத்தை பூதாகரமாக்கத் திட்டமிட்டு, மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறைக்கு ரகசியமாக ஒரு புகாரை அனுப்பியிருக்கிறார்களாம். எடப்பாடி பழனிச்சாமியின் 41 ஆயிரம் கோடி ரகசியத்தை வெளியிடுவேன் என்று அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ -வும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராகவும் இருக்கும் ஜேசிடி பிரபாகரன் சொல்லியிருப்பதை யாரும் எளிதில் கடந்து சென்று விட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மலைக்க வைக்கும் மிகப்பெரிய தொகை குறித்து அவர் சொல்லியிருப்பதால் இதன் பின்னணியில் இருப்பதை புலனாய்வு செய்து மக்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று அந்த புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாம். வாக்கு வங்கி என்ற ஒரு விஷயத்துக்காக, எடப்பாடியிடம் கடுமை காட்டாமல் அதேசமயம், ஆதரவும் தராமல் மௌனம் காத்து வருகிறது பாஜக மேலிடம்.. அதிமுகவின் ஓட்டுகளை தன்வசப்படுத்த வேண்டும் என்ற ஒரே அரசியல் லாப நோக்கத்துக்காக, பாஜக இந்த மென்மைப்போக்கை தற்சமயம் கடைப்பிடித்தாலும், ஊழல், முறைகேடு, லஞ்சம் என்று வந்துவிட்டால் சுலபமாக விடாது என்பதும் தெரிந்த விஷயம்தான். ஆகவே, ஓபிஎஸ் புள்ளி வைக்க, சசிகலா கோலம் போட ஆரம்பித்துள்ளார்.. இது எந்த அளவுக்கு அரசியலில் சலசலப்பையும் அதிரவலையையும் உருவாக்குகிறது என்பதை பொருத்திருந்து பார்ப்போம் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!