போடியில் சமுதாய வளைகாப்பு: கர்ப்பிணிகளுக்கு 7 வகை சாதங்களுடன் விருந்து

போடியில் சமுதாய வளைகாப்பு:  கர்ப்பிணிகளுக்கு 7 வகை சாதங்களுடன் விருந்து
X

போடியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பில் விருந்தில் பங்கேற்ற கர்ப்பிணிகள்.

போடியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பில் 400 கர்ப்பிணிகளுக்கு ஏழு வகையான சாதங்களுடன் விருநது வைக்கப்பட்டது.

போடியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு ஏழு வகை சாதங்களுடன் விருந்து வைக்கப்பட்டது.

தேனி மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் போடியில் தனியார் திருமண மண்டபத்தில் சமுதாய வளைகாப்பு நடந்தது. 400க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் பங்கேற்றனர். மாவட்ட திட்ட அலுவலர் ராஜராஜேஸ்வரி, உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., கவுசல்யா, ஊரக வளர்ச்சி அலுவலர் ஆண்டாள், நகராட்சி ஆணையர் சகிலா, போடி தாசில்தார் செந்தில்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கர்ப்பிணிகளுக்கு வகைகாப்பு சீதனங்கள், சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்டனர். பின்னர் திருமண மண்டபத்தில் ஏழுவகை சாதத்துடன் விருந்து நடத்தப்பட்டது. கர்ப்பிணிகளுக்கு பிரசவம் வரையும், பிரசதவத்திற்கு பின்னரும் தொடர் கண்காணிப்பு மற்றும் மருத்துவ உதவி, சிகிச்சைக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings