மேகமலை வனப்பகுதியில் குறைந்துபோன மழைப்பொழிவு

மேகமலை வனப்பகுதியில் குறைந்துபோன  மழைப்பொழிவு
X

மேகமலையில் உள்ள மணலாறு நீர் தேக்கம் நீர் நிரம்பிய நிலையில் ரம்மியமாக காட்சியளிக்கிறது.

தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் எதிர்பார்த்த அளவு மழை பொழிவு கிடைக்க வில்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

தேனி மாவட்டம் மேகமலை வனப்பகுதியில் எதிர்பார்த்த அளவு மழை பொழிவு கிடைக்க வில்லை என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: தேனி மாவட்டத்தில் வளம் மிகுந்த வனப்பகுதியாக மேகமலை இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாகவே இங்கு மழையளவு அதிகமாக இருந்தது. இந்த ஆண்டும் பரவலாக மழை கிடைத்தது. இப்போது மழை குறைந்துவ விட்டது. சாதாரண நாட்கள் போன்று லேசான சாரல் மட்டுமே பெய்து வருகிறது. மேகமலையில் உள்ள. ைஹவேவிஸ், மணலாறு, இரவங்கலாறு, துாவானம், வெண்ணியாறு நீர் தேக்கங்கள் நிறைந்து விட்டன.. எல்லா நீர் தேங்கங்களிலும் முழுமையாக நீர் நிறைந்துளளது.

மிகவும் சிறிய பேபி டேம் கூட முழுமையாக நிறைந்துள்ளது. சுருளி அருவியில் வனத்தில் மற்ற பகுதியில் பெய்த மழை நீர் வெள்ளமாக வந்தது. சின்னசுருளியிலும் முன்பு தண்ணீர் வந்தது. தற்போது இரண்டு அருவிகளிலும் பெரிய அளவில் வெள்ளம் வரவில்லை.

மேகமலை வனத்தில் தினமும் மாலை 3 மணிக்கு மேல் லேசான சாரல் தொடங்குகிறது. இரவெல்லாம் சாரல் மட்டுமே பெய்கிறது. காலை முதல் பிற்பகல் 3 மணி வரை மழை கிடைப்பதில்லை. இன்னும் ஓரிரு நாளில் நல்ல மழை கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். வைகையிலும் நீர் வரத்து சுமாராகவே இருந்து வருகிறது.. இவ்வாறு கூறினர்.



Tags

Next Story
Weight Loss Tips In Tamil