ஆண்டிபட்டியில் மூன்றாவது முறையாக அண்ணன், தம்பி பலப்பரீட்சை

ஆண்டிபட்டியில் மூன்றாவது முறையாக அண்ணன், தம்பி பலப்பரீட்சை
X

பைல் படம்.

ஆண்டிபட்டியில் உடன் பிறந்த அண்ணன், தம்பி இருவரும் மூன்றாவது முறையாக தேர்தல் களத்தில் ஒருவருக்கு ஒருவர் எதிராக களம் இறங்கி உள்ளனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றிய தலைவர் லோகிராஜன். இவரது அண்ணன் மகாராஜன். இவர்கள் உடன் பிறந்தவர்கள். கடந்த சட்டசபை இடைத்தேர்தலில் லோகிராஜன் அ.தி.மு..க, வேட்பாளராகவும், மகாராஜன் தி.மு.க., வேட்பாளராகவும் களம் இறங்கினர்.

இதில் தம்பியை வீழ்த்தி அண்ணன் வென்றார். இரண்டாவது முறையாக நடைபெற்ற சட்டசபை தேர்தலிலும் இருவரும் அதே அணியில் நேருக்கு நேர் மோதினர். இரண்டாவது முறை போட்டி கடுமையாக இருந்த நிலையிலும் அண்ணனே வென்றார்.

தற்போது ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக தம்பி லோகிராஜனும், தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவாக அண்ணன் மகாராஜனும் களம் இறங்கி தீவிரமாக வேலை செய்து வருகின்றனர்.

இம்முறை பேரூராட்சி தலைவர் பதவியை தம்பி அணி கைப்பற்றுமா? அண்ணன் அணி கைப்பற்றுமா? மூன்றாவது சுற்றில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என பலத்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு