தேனி மாவட்டத்தில் இன்று ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது

பைல் படம்.
Tamil Nadu Corona Cases Today- தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு ஆண்டாகவே கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கொரோனா இரண்டாவது அலை பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியதால் அச்சமடைந்த மக்கள் பெரும்பாலும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதனால் மூன்றாவது அலையில் பாதிப்பு ஏற்படவில்லை. அதுவும் தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் வரை கொரோனா தொற்று இல்லாமல் இருந்தது.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இரண்டு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதுவே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் நேற்று 94 பேர் மருத்துவ பரிசோதனைக்கு மாதிரிகள் கொடுத்திருந்தனர். இதன் முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் ஏழு பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.
ஏழு பேரில் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஐந்து பேர், பீகாரை சேர்ந்தவர் ஒருவர், (இவர் தேனி மாவட்டத்தில் பணிபுரிகிறார்), மதுரையை சேர்ந்தவர் ஒருவர் அடக்கம். ஒரே நாளில் ஏழு பேர் கண்டறியப்பட்டுள்ளது மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu