சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை வேண்டுகோள்

சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை வேண்டுகோள்
X

தேனி மாவட்டம் சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் பெய்யும் மழையால் மேகமலை சின்னசுருளி அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேகமலை சின்னசுருளி அருவியில் தண்ணீர் கொட்டுவதால், பயணிகள் குளிக்க வேண்டாம் என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. குடியிருப்பு பகுதிகளில் விட்டு, விட்டு பெய்தாலும், மேகமலை வனப்பகுதியில் இடைவிடாமல் இரண்டு மாதங்களுக்கும் மேலாக மழை பெய்கிறது. இதனால் சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் கொட்டுகிறது.

எனவே இந்த அபாயகரமான சூழலில் பயணிகள் யாரும் குளிக்க முயற்சிக்க வேண்டாம். அங்கு வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story