வைகையில் வெள்ளம்: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகையில் வெள்ளம்: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
X

வைகை அணை - கோப்புப்படம் 

வைகை அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.

தொடர் மழை காரணமாக, 71 அடி உயரம் கொண்ட வைகை அணை அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இன்று அதிகாலையில் வைகை அணையின் நீர்மட்டம் முழுகொள்ளளவை எட்டிய நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி, அணைக்கு வரும் தண்ணீர் அனைத்தும் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.

அதன்படி, வினாடிக்கு 3,106 கன அடி தண்ணீர் அணையில் உள்ள பிரதான 7 மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏற்கெனவே தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தற்போது ஆற்றில் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், வைகை ஆற்றில் யாரும் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்றும் பொதுப்பணித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!