தேனி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவத்தில் 5 பேர் உயிரிழப்பு

தேனி மாவட்டத்தில் வெவ்வேறு சம்பவத்தில் 5 பேர் உயிரிழப்பு
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.

சின்னமனுார் வெள்ளையம்மாள்புரத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன், 40. இவருக்கும், இதே ஊரை சேர்ந்த நேதாஜி 26, அஜித்குமார் 24, ஈஸ்வரன் 23 ஆகியோருடன் தகராறு ஏற்பட்டது. இவர்கள் கீழே தள்ளி விட்டதில் சந்திரசேகரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சந்திரசேகரன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

பெரியகுளம் ஏ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் செந்தில்குமார் 41. இவர் தனது மகன் கமலேஷ் 12 உடன் டூ வீலரில் தேனி சென்று கொண்டிருந்தார். வடுகபட்டி வெள்ளைக்கரடு பைபாஸ் ரோட்டில் சென்ற போது எதிரே வந்த கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த கமலேஷ் இறந்தார். செந்தில்குமார் சிகிச்சை பெற்று வருகிறார்.

கம்பம் அருகே கூடலுாரை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் மகன் சிவராஜ், 17. பிளஸ் 2 படித்து வந்தார். இவரது தாய் குடும்ப தகராறு காரணமாக விஷம் குடித்து கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மனம் உடைந்த சிவராஜ் வீட்டில் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தேவதானப்பட்டி சில்வார்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் பாலகிருஷ்ணன் 46. இவரது மனைவி நாகரத்தினம் 37 கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதனால் மனம் உடைந்த பாலகிருஷ்ணன் விஷம் குடித்து இறந்தார்.

பெரியகுளம் வடகரை வடக்கு பாரஸ்ட் ரோட்டை சேர்ந்தவர் வக்கீல் ஜெபராஜ் 38. இவர் அதே பகுதியில் உள்ள தென்னந்தோப்பு கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். திடீரென மூச்சு திணறி உயிரிழந்தார்.

Tags

Next Story