தேனி மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவி மாயம்

தேனி மருத்துவக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவி மாயம்
X

தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை.

தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு படித்த மாணவி மாயமாகியது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கீழத்தெருவை சேர்ந்த பேயாண்டி என்பவர் மகள் சுதா, 19. இவர் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ்., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

தினமும் காலையிலும், மாலையிலும் வீட்டிற்கு அலைபேசியில் பேசுவார். கடந்த இரண்டு நாட்களாக பேசவில்லை. அவரது மொபைலும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

மருத்துவக் கல்லுாரியில் பேயாண்டி வந்து விசாரித்த போது, சுதா தனது வீட்டிற்கு செல்வதாக கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசில் பேயாண்டி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ai future project