முதல் நாள் பகீர்.. அடுத்த நாள் நிம்மதி.. தேனியில் சடுகுடு ஆடும் கொரோனா

முதல் நாள் பகீர்.. அடுத்த நாள் நிம்மதி..  தேனியில் சடுகுடு ஆடும் கொரோனா
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று பெருமளவில் குறைந்தாலும், மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து பதட்டமான நிலையிலேயே உள்ளது.

தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று திடீரென 2 நபர்களுக்கு கண்டறியப்படுவதும், அடுத்த நாளே யாருக்கும் கண்டறியப்படாமல் இருப்பதுமாக ஒரு சடுகுடு ஆட்டம் நடந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று மாத சராசரியை எடுத்துக் கொண்டால் 26 நாட்கள் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை. இந்த 26 நாட்களும் சைபர் தொற்று நாட்கள் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆனால் மாவட்ட மக்கள் நிம்மதியாக வாழ முடியவில்லை. காரணம் பக்கத்தில் உள்ள கேரளாவில் கொரோனா பரவல் இன்னும் கொஞ்சம் கூட கட்டுப்பாட்டிற்குள் வரவில்லை.

தேனி மாவட்ட மக்களும், கேரள மக்களும் மிக நெருக்கிய பிரிக்க முடியாத வாழ்வியல் தொடர்புகளை உருவாக்கி உள்ளனர். இதனால் மக்கள் நடமாட்டம் தமிழக, கேரள மாவட்டங்களிடையே சரளமாக உள்ளது. எனவே கேரள மக்கள் மூலம் எந்த நேரம் தேனி மாவட்டத்தில் எந்த நோய் பரவுமோ என்ற கடும் பீதி காணப்படுகிறது.

காரணம் கேரளாவின் சுகாதாரத்துறை மிக, மிக மோசம். அங்கு சுகாதார கட்டமைப்புகளும் மிகவும் மோசம். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கூட தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தான் சிகிச்சைக்கு வருகின்றனர். பக்கத்து மாவட்டம், மிகவும் நெருங்கிய வாழ்வியல் தொடர்புள்ள மாவட்டம் பெருமளவில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் 2 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டாலும், இது இப்படியே தொடர்ந்து விடுமோ என மாவட்ட நிர்வாகம் பதட்டத்திற்கு உள்ளாகி விடுகிறது.

ஆனால் மறுநாளே யாருக்கும் தொற்று இல்லை என ரிசல்ட் வருகிறது. கடந்த ஆறு நாட்களில் மூன்று நாட்கள் தலா இருவருக்கு தொற்று கண்டறியப்படுகிறது. அடுத்த நாளே தொற்று இல்லாத சைபர் தொற்று நாட்களாக கண்டறியப்படுகிறது. இந்த சடுகுடு ஆட்டமும் மாவட்ட நிர்வாகத்தையும், சுகாதாரத்துறை அதிகாரிகளையும் பீதியிலேயே வைத்திருக்கிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!