சாலையின் அவலத்தைக் கண்டித்து நாற்று நடும் போராட்டம்: கிராம மக்கள் அறிவிப்பு

சாலையின் அவலத்தைக் கண்டித்து நாற்று நடும் போராட்டம்: கிராம மக்கள் அறிவிப்பு
X

வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட திருச்செந்துார் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் அவல நிலை

வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து சேறும் சகதியுமாக உள்ள சாலையில் நெல்நாற்று நடும் போராட்டத்தை அறிவித்துள்ளனர்

சாலையின் அவல நிலையைக் கருத்தில் கொண்டு பகலில் சாலையில் நாற்று நடுவதுடன் இரவில் பண்டைய காலம் போல் தீப்பந்தம் ஏற்றி வைக்கப்போவதாகவும் கிராமமக்கள் அறிவித்துள்ளனர்.

தேனியை அடுத்துள்ள வீரபாண்டி பேரூராட்சிக்கு உள்பட்ட திருச்செந்துார் கிராமத்தில் சாலைகள் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. சாலையின் இரு ஓரங்களிலும் புதர் மண்டிக் காணப்படுகிறது. மின்விளக்குகள் எங்குமே இல்லை. பலமுறை மனு கொடுத்தும் பலன் இல்லை. எனவே, ஓரிரு நாளில் (மழை நின்றதும்) ரோட்டில் நெல் நாற்றுக்களை நடவு செய்யப் போகிறோம். இரவில் பண்டைய காலம் போல் சாலையோரங்களில் தீப்பந்தங்கள் ஏற்றி வைக்கப்போவதாகவும், பாம்பு பிடிப்பவர்களை வரச் சொல்லி இருப்பதாகவும், பாம்புகளை பிடித்துச் சென்று வனத்திற்குள் விட்ட பிறகாவது, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai powered agriculture