தேனி நகர்ப்புற உள்ளாட்சிகளில் 6 லட்சத்து 14 ஆயிரத்து 974 வாக்காளர்கள்

தேனி நகர்ப்புற உள்ளாட்சிகளில்  6 லட்சத்து 14 ஆயிரத்து 974 வாக்காளர்கள்
X

தேனி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலை,  கலெக்டர் முரளீதரன் இன்று வெளியிட்டார்.

தேனி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலை, கலெக்டர் முரளீதரன் இன்று வெளியிட்டார்.

தேனி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளில் உள்ள வாக்காளர் பட்டியலை, கலெக்டர் முரளீதரன் அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று வெளியிட்டார். இதன்படி மாவட்டத்தில் ஆறு நகராட்சிகளில் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 542 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 993 பெண் வாக்காளர்கள், 98 இதர வாக்காளர்கள் உள்ளனர். 22 பேரூராட்சிகளில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 127 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 183 பெண் வாக்காளர்கள், 39 இதர வாக்காளர்கள் உள்ளனர்.

ஆக மொத்தம், தேனி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சிகளில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 669 ஆண் வாக்காளர்கள், 3 லட்சத்து 15 ஆயிரத்து 176 பெண் வாக்காளர்கள், 129 இதர வாக்காளர்கள் உள்ளனர். இந்த பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் தி.சுப்பிரமணியன், கலெக்டரின் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் தங்கராஜ், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் முத்துக்குமார், அனைத்து நகராட்சி கமிஷனர்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!