மொபைல் டவர்களுக்கு பாதுகாப்பு வேலி..!

Theni District News | Theni News
X

மொபைல் டவர்களுக்கு தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.(கோப்பு படம்)

Theni District News-மொபைல் டவர்களை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என தீயணைப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.

Theni District News-தேனி மாவட்டத்தில் நுாற்றுக்கணக்கான மொபைல் டவர்கள் கட்டப்பட்டுள்ளன. பல அலைபேசி நிறுவனங்கள் இந்த டவர்களை அமைத்துள்ளன.

குடிமகன்கள், கஞ்சா புகைப்பவர்கள் மற்றும் குடும்ப தகராறு காரணமாக மனம் உடைந்தவர்கள், அரசு அதிகாரிகளை மிரட்ட நினைப்பவர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த டவர் மீது ஏறி போராட்டம் நடத்துகின்றனர். இவர்கள் ‛ஹைடென்சன்’ மின் லைனில் ஏறி போராட்டம் நடத்தினால் கருகிய நிலையில் துாக்கி வீசப்பட்டு விடுவார்கள்.

இதனால் இது போன்ற மனநிலை கொண்டவர்கள் அலைபேசி டவர் மீது குதித்த விடுவேன் என மிரட்டுவது வாடிக்கையாகி வருகிறது. இவர்களை சமரசம் செய்து கீழே இறக்கும் முன்னர் தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, போலீஸ் துறையினருக்கு ‛போதும், போதும்’ என்றாகி விடுகிறது.

எனவே இந்த சிக்கலைத் தடுக்க தீயணைப்புத்துறை சம்மந்தப்பட்ட அலைபேசி நிறுவனங்களை தொடர்பு கொண்டு தங்கள் கம்பெனி டவரை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என அறிவறுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் மூலமாக டவர்கள் பாதுகாக்கப்படுவதுடன் அவர்களின் எல்லைப்பகுதி வரையறுக்கப்பட்டுவிடுகிறது. மேலும் குடிமகன்களின் மிரட்டல் சவடால்களையும் சமாளித்துவிட முடியும் என்று தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினர் கூறுகின்றனர்.

Tags

Next Story
நா.த.க. வேட்பாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு