பெண் வனக்காவலர் கொலை: மதுரை காவல்நிலையத்தில் சரணடைந்த ஆயுதப்படை காவலர்

பெண் வனக்காவலர்  கொலை: மதுரை காவல்நிலையத்தில் சரணடைந்த ஆயுதப்படை காவலர்
X

கொலையான பெண் வனக்காவலருடன் சரணடைந்த ஆயுதப்படை போலீஸ்காரர்.

போடியில் பெண் வனக்காவலரை கொலை செய்ததாக ஆயுதப்படை காவலர் மதுரையில் சரணடைந்தார்

போடியில் பெண் வனக்காவலரை கொலை செய்த போலீஸ்காரர் மதுரை கீரைத்துறை போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.

போடி தென்றல்நகர் தெற்கு தெருவில் வசித்து வருபவர் சரண்யா( 27). இவரது கணவர் பொன்பாண்டி இறந்து விட்டார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் சரண்யா, தேனி வனத்துறையில் 2020ம் ஆண்டு முதல் வனக்காவலராக பணியாற்றி வந்தார். மதுரை சிறப்பு காவல்படையில் போலீசாக பணிபுரிந்து வரும் திருமுருகன்( 33,) என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்தது.

நேற்று போடி வந்த திருமுருகன் தனது காதலி சரண்யாவுடன் தங்கியுள்ளார். இந்நிலையில் சரண்யா இன்று காலை இறந்து கிடந்தார். போடி போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மோப்பநாய் சரண்யா வீட்டில் இருந்து போடி பஸ்ஸ்டாண்ட் வரை வந்து நின்றது. இதனால் குற்றவாளி பஸ் ஏறி தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் நினைத்துக் கொண்டிருந்தனர் இந்நிலையில், சரண்யாவை கொலை செய்ததாகக்கூறி திருமுருகன், மதுரை கீரைத்துறை போலீசில் சரணடைந்த தகவல் போலீசாருக்கு கிடைத்து. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு