இருட்டு, குடிமகன்களின் தொல்லை தேனியில் தவிக்கும் பெண் பக்தர்கள்

இருட்டு, குடிமகன்களின் தொல்லை  தேனியில் தவிக்கும் பெண் பக்தர்கள்
X

தேனி பத்ரகாளியம்மன்(பைல் படம்)

தேனி காட்டுபத்திரகாளியம்மன் கோயிலுக்கு செல்லும் சாலையில் குடிமகன்கள் தொல்லை யால் பெண் பக்தர்கள் அவதிப்படுகின்றனர்

தேனியில் பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே காட்டுபத்திரகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்கு அருகில் சுடுகாடும் உள்ளது. இதனால் பக்தர்கள் சுடுகாட்டு பாதையினை பயன்படுத்தாமல், பஸ்ஸ்டாண்டிற்கு எதிரே உள்ள தனியார் வர்த்தக நிறுவனங்கள் அமைத்து கொடுத்துள்ள பாதை வழியாக கோயிலுக்கு செல்கின்றனர். இந்த பாதை 300 மீட்டர் துாரம் வயல்பகுதிகளுக்குள் செல்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு நகராட்சி தார்ரோடு அமைத்துக் கொடுத்தது. அதன் பின்னர் பராமரிக்கவே இல்லை. இப்போது ரோடு பெயர்ந்து குண்டும் குழியுமாக நடக்கவே முடியாத நிலையில் உள்ளது. தவிர இந்த பாதையில் நகராட்சி அமைத்துள்ள மின்விளக்குகள் எரிவதில்லை. இந்த பாதையினை ஒட்டி டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இதனால் குடிமகன்களின் தொல்லை அதிகம் உள்ளது.

பாதையின் இருபுறமும் குப்பை கொட்டுவதோடு, உலர் கழிப்பிடமாகவும் பயன்படுத்துகின்றனர். வெள்ளி, செவ்வாய், பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி மற்றும் முக்கிய நாட்களில் பெண்கள் பக்தர்கள் அதிகம் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். இந்த பாதையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாததால், கும்பல், கும்பலாக அச்சத்துடன் செல்கின்றனர். இந்த பாதையினை சீரமைத்து, மின்விளக்குகள் அமைத்து, குடிமகன்களின் தொல்லையினை தடுக்க வேண்டும் என பெண் பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil