இடுக்கி அணையை உடைக்க பேரணி செல்வோம்: 5 மாவட்ட விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
முல்லை பெரியாறு அணை பைல் படம்
முல்லை பெரியாறு அணையை உடைக்க வலியுறுத்தி கேரளாவில் பேரணி நடத்தினால், அதே போல இடுக்கி அணையை உடைக்க வலியுறுத்தி நாங்களும் பேரணி நடத்துவோம் என் முல்லைபெரியாறு பாசன ஐந்து மாவட்ட விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.
இது தொடர்பாக, ஐந்து மாவட்ட விவசாய சங்க தலைவர் எஸ்.ஆர்.,தேவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: கேரள காவல் துறையின் கவனத்திற்கு, வரும் டிசம்பர் 5 ம் தேதி முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற கோரிக்கை முழக்கத்துடன், எர்ணாகுளத்தில் இருந்து ஆலுவா வழியாக கோதமங்கலம் வரை, இருசக்கர வாகன பேரணி ஒன்றை நடத்துவதாக வழக்கறிஞர் ரசல் ஜோய் அறிவித்திருப்பது ஒட்டு மொத்த தமிழகத்தையும் கேரளத்தையும் பதற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கியிருக்கிறது.
இந்த இரு சக்கர வாகன பேரணியை கேரள மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையேல் தமிழக ஐந்து மாவட்ட விவசாய சங்கம் சார்பில், தேனியிலிருந்து சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் வழியாக குமுளியை நோக்கி, இடுக்கி அணையை உடைக்க வேண்டும் என்று நாங்களும் இருசக்கர வாகனப் பேரணியை நடத்துவதை தவிர வேறு வழியில்லை. #decommissionmulapperiyar என்று அவர்கள் முழங்கினால், நாங்களும் #decommission_idukki_dam என்று முழங்குவோம்.
முதலில் ரசல் ஜோய், பின்னர் டாக்டர் ஜோ ஜார்ஜ் என்ற வரிசையில் தற்போது ஜோசப், அடுத்து கொல்லம் நாடாளுமன்ற உறுப்பினர் என்.கே. பிரேமச்சந்திரன், கண்ணனூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுதாகர் என ஒரு பெரிய இனவெறிக்கூட்டமே பெரியாறு அணையை உடைக்க கிளம்பியிருக்கும் நிலையில், மிகவும் ஆபத்தான இடுக்கி அணையை உடைப்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என அவர் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu