முல்லைப்பெரியாறு அணை ஆணையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

முல்லைப்பெரியாறு அணை ஆணையம் அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்
X

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் ச.அன்வர்பாலசிங்கம்.

Mullaperiyar Dam Issue -காவிரி ஆணையம் அமைத்ததை போல் பெரியாறு ஆணையம் அமைக்க வேண்டும் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

Mullaperiyar Dam Issue -காவிரி ஆணையம் அமைத்ததை போல் பெரியாறு ஆணையம் அமைக்க வேண்டும் என பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறியதாவது:-

முல்லைப்பெரியாறு அணைப்பிரச்னையில் கேரள அரசு பல்வேறு விஷம பிரச்சாரங்களை செய்து வருகிறது. தமிழகத்தின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது. காவிரி நதிநீர் பங்கீட்டு ஆணையம் அமைத்த பிறகு, காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு தலைவலி குறைந்து விட்டது. அதே போல் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையிலும் ஆணையம் அமைக்க வேண்டும். இதில் மத்திய அரசு அதிகாரிகள் கட்டாயம் இடம்பெற வேண்டும்.

இவர்கள் முல்லைப்பெரியாறு அணையினை தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது, பேபி அணையினை பலப்படுத்துதல், நீர் மட்டத்தை உயர்த்துதல், நீர் வரத்தினை கணக்கிட்டு நீர் திறப்பது போன்ற பல்வேறு பணிகளை நிர்வகிக்க வேண்டும். இது போன்ற ஒரு ஆணையம் அமைந்தால் மட்டுமே தமிழகத்திற்கு பிரச்சினை தீரும். நாங்கள் இந்த ஆணையம் அமைக்க வலியுறுத்துகிறோம். இந்த ஆணையத்திற்கு தேவையான ஆவணங்களையும் நாங்கள் வழங்க தயாராக உள்ளோம். இவ்வாறு கூறினார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!