தேனியில் களைகட்டும் பசும்புல் சந்தை; குறைந்த விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி

தேனியில் களைகட்டும் பசும்புல் சந்தை;  குறைந்த விலையால் விவசாயிகள் மகிழ்ச்சி
X

தேனி அல்லிநகரத்தில் பெரியகுளம் சாலையோரம் செயல்படும் பசும்புல்சந்தை.

தேனி பசும்புல் சந்தையில் பசுந்தீவனங்கள் குறைவான விலையில் விற்பனை செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தேனியில் உள்ள சில விவசாயிகள் தங்களது தோட்டங்களில் சோளத்தட்டை, சீமைப்புல் போன்றவற்றை சாகுபடி செய்து பக்குமான வளர்ச்சி பெற்றதும் அதனை அறுவடை செய்து, அல்லிநகரம் பசும்புல் சந்தைக்கு கொண்டு வருகின்றனர். அங்கு 5 ரூபாய் அளவுள்ள சிறிய கட்டுகளாக கட்டி விற்பனை செய்கின்றனர்.

காலை 6 மணிக்கு செயல்படத் தொடங்கும் இந்த சந்தை மாலை 6 மணி வரைக்கும் செயல்படுகிறது. அல்லிநகரத்தில் பாத்திமா தியேட்டர் அருகே உள்ள பெரியகுளம் சாலையோர சந்திப்பில் இந்த சந்தை பல ஆண்டுகளாக செயல்படுகிறது.

தற்போது மழைப்பொழிவு சுமாராக இருப்பதாலும், விளைச்சல் நன்றாக இருப்பதாலும், ஒரு கட்டு பசும்புல் 5 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். விவசாயிகளுக்கு இது கட்டுபடியான விலை. எனவே விரும்பி வாங்கிச் செல்கின்றனர் என பசும்புல்சந்தை விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business