சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நீரை திறக்கலாம் ஆனால் தேக்க மட்டும் கூடாது... ஏன் இந்த பாகுபாடு...

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி நீரை திறக்கலாம்  ஆனால் தேக்க மட்டும் கூடாது... ஏன் இந்த பாகுபாடு...
X

முல்லை பெரியாறு அணை.

சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி நீரை திறப்பவர்கள் அதே உத்தரவுப்படி ஏன் நீரை தேக்கவில்லை என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்

சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி முல்லை பெரியாறு அணையில் நீரை திறந்தவர்கள், அதே உத்தரவில் கூறியுள்ளபடி ஏன் தேக்கவில்லை? என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் கேள்வி எழுப்பி உள்ளது.

முல்லை பெரியாறு அணையில் சுப்ரீம்கோர்ட் உத்தரவுப்படி 138.50 அடி தண்ணீர் வந்தவுடன் தண்ணீரை கேரள அரசு வீணாக கடலுக்கு திறந்து விட்டது. அதேசுப்ரீம் கோர்ட் நவம்பர் மாதம் 11ம் தேதி நிலவரப்படி முல்லை பெரியாறு அணையில் 139.5 அடி நீரை தேக்க வேண்டும் என கூறியுள்ளது. தண்ணீரை திறக்க மட்டும் ஓடி வந்தவர்கள். இப்போது அதேசுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி ஏன் தேக்கவில்லை. இன்று அணையின் நீர்மட்டம் 138.70 அடி மட்டுமே உள்ளது. ஏன் இன்று 139.5 அடி நீரை தேக்கவில்லை. தமிழக அரசின் வாக்குறுதி என்ன ஆனது? என ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Tags

Next Story
ai marketing future