மாற்றுத்திட்டம் மூலம் மதுரைக்கு குடிநீர்: மேயரிடம் விவசாயிகள் முறையீடு

மாற்றுத்திட்டம் மூலம் மதுரைக்கு குடிநீர்: மேயரிடம் விவசாயிகள் முறையீடு
X

கூடலுார் வந்த மதுரை மேயர் இந்துராணியிடம், லோயர்கேம்ப்பில் இருந்து மாற்றுத்திட்டங்களின் மூலம் மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி, மனு கொடுத்த விவசாயிகள்.

லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் மாற்றுத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் எனக்கோரி விவசாயிகள் மனு கொடுத்தனர்.

தேனி மாவட்டம், குமுளி அருகே லோயர்கேம்ப்பில், முல்லை பெரியாற்றில் இருந்து மதுரைக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை செயல்படுத்த 1300 கோடி ரூபாய் அரசு ஒதுக்கி உள்ளது. குழாய் மூலம் குடிநீர் கொண்டு சென்றால் தேனி மாவட்டம் பாலைவனமாகி விடும். எனவே இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது. மாற்றுத்திட்டத்தின் மூலம் குடிநீர் கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரைமேயர் இந்திராணி தனது உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்க கூடலுார் வந்தார். அவரை முல்லைச்சாரல் விவசாயிகள் சங்க தலைவர் கொடியரசன், செயலாளர் ஜெகன், பொருளாளர் ஜெயபால், துணைத்தலைவர் ராஜா, துணைச் செயலாளர் ரவி, பாரதீயகிஷான் சங்க மாவட்ட தலைவர் சதீஷ்பாபு உட்பட விவசாயிகள் சந்தித்து, லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை மாற்று வழிகளின் மூலம் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி