முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறந்த நாள்: பென்னிகுவிக் சிலைக்கு மரியாதை

முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறந்த நாள்: பென்னிகுவிக் சிலைக்கு  மரியாதை
X

லோயர்கேம்ப்பில் உள்ள பென்னிகுவிக் மணி மண்டபத்தில் அவரது சிலைக்கு விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முல்லை பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நாளையொட்டி பென்னிகுவிக் சிலைக்கு மரியாதை

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 1985ம் ஆண்டு அக்டோபர் 10-ஆம் தேதி முதன் முதலாக தேனி மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனை நினைவு கூறும் வகையில் இன்று முல்லைச்சாரல் விவசாய சங்கம், முல்லை பெரியாறு பாசன மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம் சார்பில் லோயர்கேம்ப்பில் உள்ள ஜான் பென்னி குவிக் (பெரியாறு அணை கட்டிய ஆங்கிலேய பொறியாளர்) சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக அரசால் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பென்னிகுவிக்கின் நினைவைப் போற்றும் வகையில் அவருக்கு சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இருக்கும் பல விவசாயக் குடும்பங்களின் வீடுகளில் பென்னிகுவிக் படம் வைக்கப்பட்டுள்ளது. தேனி மற்றும் மதுரை மாவட்டத்தில் சில விவசாயக் குடும்பத்தினர் வீடுகளில் குழந்தைகளுக்கு பென்னிகுவிக் என்று பெயர் வைக்கும் வழக்கம் இன்னும் இருக்கிறது. தேனி மாவட்டத்தில் சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, பாலார்பட்டி, கூழையனூர் போன்ற ஊர்களில் பென்னிகுவிக் நினைவைப் போற்றிட ஆண்டு தோறும் கிராமத்துத் தெய்வங்களை வணங்குவது போல் பொங்கல் வைத்து வழிபடும் வழக்கம் கூட உள்ளது. குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
காசநோய், டெங்கு காய்ச்சல் பரவல் தடுப்பு: ஈரோட்டில் விழிப்புணர்வு முகாம்