கம்பத்தில் இருசக்கர வாகனம் மாேதி விவசாயி உயிரிழப்பு

கம்பத்தில் இருசக்கர வாகனம் மாேதி விவசாயி உயிரிழப்பு
X
ஆட்டு மந்தை கூட்டத்தில் டூ வீலர் பாய்ந்து விவசாயி உயிரிழந்தார். சில ஆடுகள் பலத்த காயமடைந்தன.

கம்பத்தில் ஆட்டுமந்தை கூட்டத்தில் இருசக்கர வாகனம் பாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார். சில ஆடுகளும் பலத்த காயமடைந்தன.

சின்னமனுார் அருகே எல்லப்பட்டியை சேர்ந்தவர் பால்பாண்டி 42. இவர் ஆட்டு மந்தை வைத்துள்ளார். கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் தோட்டத்தில் ஆட்டு கிடை போட இவருக்கு வாய்ப்பு வந்தது. இதனால் நேற்று மாலை ஆடுகளை ஓட்டிக்கொண்டு கம்பம் சென்றார்.

கம்பத்தில் கூடலுார் பைபாஸ் ரோட்டை கடக்கும் போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மந்தை கூட்டத்திற்குள் புகுந்தது. இதில் பால்பாண்டி துாக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். சில ஆடுகளும் பலத்த காயமடைந்தன.

இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் பலத்த காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கம்பம் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்