வருஷநாடு அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு

வருஷநாடு அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு
X

பைல் படம்.

வருஷநாடு அருகே ஆட்டிற்கு இலை வெட்டும் போது, மின்சாரம் தாக்கியதில் விவசாயி உயிரிழந்தார்.

ஆட்டிற்கு தீவனம் அறுக்கும் போது மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழந்தார்.

வருஷநாடு அருகே காமன்கல்லுாரை சேர்ந்தவர் சேகர், 36. இவர் தான் வளர்க்கும் ஆடுகளுக்கு தீவனம் அறுவடை செய்வதற்காக இலவம் மரத்தின் மீது ஏறி இலைகளை ஓடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது இலையின் நுனி மின்கம்பத்தின் வழியாக செல்லும் வயர்மீது உரசியது. இதில் மின்சாரம் தாக்கியது. பலத்த காயமடைந்த சேகர் மரத்தில் இருந்து தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மயிலாடும்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்