/* */

தமிழ் எழுத்துலகத்தை உயர்த்தி வைத்த சுஜாதா

Famous Writer Rangarajan பதினாறு வயதினிலே படத்தின் அதீத வெற்றிக்கு முக்கிய காரணம், அந்தப் படம் தமிழ் சினிமா ரசிகனைக் கொஞ்சம் மேலே கொண்டு போய் உட்கார்த்தி வைத்தது.

HIGHLIGHTS

Famous Writer Rangarajan

மறைந்த புகழ்பெற்ற எழுத்தாளருமான சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன்....இது எத்தனை பேருக்கு தெரியும்.இப்படி ரசிகனை மேலே வைப்பதற்குக் கொஞ்சம் துணிச்சலும் நிறைய சாதுர்யமும் வேண்டும். எந்த லெவலுக்கு உயர்த்தினால் செல்லுபடி ஆகும் என்பது தெரிந்திருக்க வேண்டும். நாலடி ஹைஜம்ப் தாண்டுகிறவனை எடுத்த எடுப்பில் ஆறடி தாண்ட வைக்க முடியாது. தினமும் ஒரு இஞ்ச் வீதம் பனிரெண்டு நாட்களில் ஐந்தடிக்கு பிரமோட் செய்வது போலச் செய்ய வேண்டும்.

எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் எழுத்தாளர் சுஜாதாவின் வெற்றியும் வாசகனைக் கொஞ்சம் உயரத்தில் வைத்தது தான்! தமிழ் வாசக ரசனை உயர்ந்து கொண்டே வருவதை சுஜாதா உன்னிப்பாகக் கவனித்து வந்திருக்கிறார். தமிழ் உரைநடை வளர்ச்சியை விளக்க அவர் எழுதியிருக்கும் சில விஷயங்களை நண்பர்களுடன் பகிர விருப்பம் :

துள்ளல் ஓசைத்தாய் நேரீற்றியற் சீரும், நிரை நடுவாகிய வஞ்சியுரிச் சீரும் வாராது, நிரை முதலாகிய வெண்பா விரிச் சீர்மிக்கு நேரடித்தாய்க் கலித் தளையும்..../’ என்று யாப்பருங்கலக் காரிகைக்கு குணசாகரர் என்பவர் எழுதிய உரையை மேற்கோள் காட்டி ஆரம்பிக்கிறார். பிறகு,

‘விழுந்து வணங்குவது போல் ஒரு கூண்டு வண்டி அவிழ்த்து விடப்பட்டிருந்தது. அதன் காலில் கட்டியிருந்த மாடுகளின் மணி சோம்பலுடன் ஒலித்தது/’ என்று மோகமுள் நாவலில் ஜானகிராமன் எழுதியிருப்பதைச் சொல்கிறார்.

Famous Writer Rangarajanதலைமுறைக்குத் தலைமுறை தமிழ் உரைநடை இப்படி வளர்ந்து கொண்டே வந்திருக்கிறது. ’இத்துடன் என் சிற்றுரையை முடித்துக் கொண்டார்’ என்றொரு வாக்கியம் சுஜாதா எழுதியிருக்கிறார். தன்னிலையும், படற்கையும் ஒரே ஆளைக் குறிக்கும் இந்த வாக்கியத்தில் ஒரு விஷயம் சுருக்கமாகவும் வித்தியாசமாகவும் சொல்லப்பட்டிருக்கிறது.

புன்னகைத்தான் என்கிற பிரயோகத்தைத் தமிழ்கூறும் நல்லுலகுக்கு முதலில் அறிமுகம் செய்தவர் சுஜாதா. அதாவது ஓரு பெயர்ச் சொல்லை வேறு சொல்லின் உதவியின்றி வினைச் சொல்லாக மாற்றுதல். புன்னகை செய்தான், பயணம் செய்தான் என்றெல்லாம் எழுதியது மாறி புன்னகைத்தான், பயணித்தான் என்றெல்லாம் சொல்வது இப்போது சாதாரணம் ஆகிவிட்டது. இந்த மாற்றத்தைத் தமிழ் அறிஞர்களும் ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என்பது கவனிக்கத் தக்கது.

Famous Writer Rangarajanமுன்னோர் என்கிறவர்கள் பொதுவாக ரொம்ப Conservative ஆசாமிகள். எந்த மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டார்கள். மாற்றுகிறவர்களை மூடன் என்றும், தமிழ்த் துரோகி என்றும் தான் சொல்வார்கள். ஆனால், இத்தகைய மாற்றங்களைச் செய்யும் தகுதி எனக்கு இருக்கிறது என்பதைத் தன் எழுத்துக்கள் மூலம் பதிவு செய்திருந்தார் சுஜாதா.

அறுபதுகளில், நேரிசை வெண்பா எழுதும் அளவுக்குத் தமிழில் பாண்டித்யம் எந்தப் புகழ் பெற்ற எழுத்தாளருக்கும் இல்லை. சுஜாதா தமிழ் இருக்கும் வரை மக்கள் நினைவில் இருப்பார்!

Updated On: 28 Feb 2024 5:09 PM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து...
 2. காஞ்சிபுரம்
  வாக்குப்பதிவில் அசத்திய மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள்..!
 3. காஞ்சிபுரம்
  வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு - எஸ்பி...
 4. லைஃப்ஸ்டைல்
  துரோகிகளை தூக்கி எறியுங்கள்..! துன்பங்கள் தானே விலகும்..!
 5. குமாரபாளையம்
  கத்தேரி பிரிவில் விளையாட்டு மைதானம், அரசு ஆரம்ப சுகாதார மையம் அமைக்க...
 6. ஈரோடு
  ஈரோடு: தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி மூதாட்டி பரிதாப உயிரிழப்பு
 7. காஞ்சிபுரம்
  அதிகளவில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களித்த ஆண்கள்..!
 8. காஞ்சிபுரம்
  12 மணி நேரம் தொடர் பணி : வருவாய்த்துறை ஊழியர்கள் பணிக்கு வரவேற்பு..!
 9. லைஃப்ஸ்டைல்
  அப்பாவின் கோபமும் மாயமாகும் அக்காவின் ஒற்றை சொல்லால்..!
 10. ஈரோடு
  ஈரோடு மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருப்பறையில் வைத்து...