குடும்ப அரசியல், வாரிசு அரசியல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகரிப்பு

குடும்ப அரசியல், வாரிசு அரசியல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிகரிப்பு
X
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் அத்தனை கட்சிகளிலும் குடும்ப அரசியலும், வாரிசு அரசியலும் கொடி கட்டிப்பறக்கிறது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் குடும்ப அரசியலும், வாரிசு அரசியலும் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது என பலரும் வெளிப்படையாகவே பேசுகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவடைந்த நிலையில், மனுதாக்கல் செய்தவர்களின் பட்டியலை ஆய்வு செய்தால் குடும்ப அரசியல் ஆதிக்கம், வாரிசு அரசியல் ஆதிக்கம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

இதில் கட்சிப்பாகுபாடு ஏதும் இல்லை. அத்தனை கட்சியிலும் குடும்ப அரசியலும், வாரிசு அரசியலும் கொடி கட்டிப்பறக்கிறது. முக்கிய கட்சிகளில் கணவன் ஒரு வார்டு, மனைவி ஒரு வார்டில் போட்டியிடுகின்றன்ர. அதேபோல் அண்ணன் ஒரு வார்டு, தம்பி ஒரு வார்டில் நிற்கின்றனர். மாமியார் ஒரு வார்டு, மருமகள் ஒரு வார்டில் நிற்கின்றனர். தந்தையோ, தாயோ கடந்த முறை கவுன்சிலராக இருந்து இம்முறை வெற்றி வாய்ப்பு இருந்தாலும், தங்களது வாரிசுகளுக்கு தான் விட்டுக் கொடுத்து மனுதாக்கல் செய்துள்ளனரே தவிர, கட்சியின் வேறு உறுப்பினர்களுக்கு வழங்கவில்லை. இது பற்றி கேட்ட போது, மக்களுக்கு உழைத்தது எங்கள் குடும்பம். அதனால் அதன் பலனை நாங்கள் தான் அறுவடை செய்ய வேண்டும் என ஒரே மாதிரி பதில் தான் அத்தனை கட்சி வேட்பாளர்களிடம் இருந்தும் வருகிறது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!