கேரள எல்லைகளை மூடி உண்ணாவிரதம் இருப்போம்..!

கேரள எல்லைகளை மூடி உண்ணாவிரதம் இருப்போம்..!
X

ச.பென்னிகுயிக்,மாநிலச் செயலாளர்- தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்

முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கேரளாவில் நடக்கும் விஷமப்பிரசாரங்கள், போராட்டங்களை கை விடாவிட்டால் நாங்களும் களத்திற்கு வருவோம்.

பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளரும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில செயலாளருமான ச.பென்னிகுயிக் கூறியதாவது: இடுக்கி மாவட்டம் முழுவதும் பரவலாக முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை வேண்டும் என்கிற கோஷம் வலுப்பெற்றதை அடுத்து தொடர்ந்து ஆங்காங்கே உண்ணாவிரதம் நடைபெற்று வருகிறது.

சப்பாத்து, கட்டப்பனை உள்ளிட்ட இடங்களில் Christian Youth Association என்கிற என்.ஜி.ஓ அமைப்பு முன்னெடுத்திருக்கும் கட்டப்பனை உண்ணாவிரதத்தில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள் நடத்தி வரும் இந்த உண்ணாவிரத போராட்ட நாடகங்கள், தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

கட்டப்பனையில் உண்ணாவிரதம் இருப்பவர்களுடைய பேச்சுக்களை செவிமடுத்தால், முழுக்க முழுக்க அது தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே இருக்கிறது என்பதை கேரள மாநில காவல்துறை புரிந்து கொள்ள வேண்டும்.

நிலைமை இதுபோல் இடுக்கி மாவட்டத்தில் நீடிக்கும் பட்சத்தில் நாங்களும் களத்திற்கு வருவோம். சாமானிய மலையாளிகளை முல்லைப் பெரியாறு அணைக்கு எதிராக தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு வரும் நாகர்கோயில்- பாறசாலை- திருவனந்தபுரம் ,செங்கோட்டை- ஆரியங்காவு-கொல்லம், மேக்கரை- அச்சன்கோவில்- புனலூர், கம்பம்-குமுளி-கோட்டயம், கம்பம்-கம்பம் மெட்டு- நெடுங்கண்டம், போடி-போடி மெட்டு- மூணாறு, உடுமலைப்பேட்டை-சின்னாறு- மூணாறு, பொள்ளாச்சி- கொழிஞ்சாம்பாறை-சித்தூர்- பாலக்காடு, கோயம்புத்தூர்- ஆனைகட்டி-அட்டப்பாடி, கோயமுத்தூர்- வாளையார்- பாலக்காடு, உதகை-கூடலூர்- நாடுகாணி- நிலம்பூர், உதகை-கூடலூர்- சுல்தான் பத்தேரி ஆகிய பிரதான வழிகளை பத்து நாட்கள் இழுத்துப் பூட்டினால் கேரளாவின் உள் மாவட்டங்களில் கடும் உணவு பஞ்சம் ஏற்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.

மலையாள சகோதரர்களை இன்னமும் நாங்கள் பங்காளிகளாகவே பார்க்கிறோம். அந்த நிலையிலிருந்து எங்களை தடம் மாற வைத்து விட வேண்டாம் என்று தன்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

சப்பாத்திலும், கட்டப்பனையிலும் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக ஆட்களை திரட்டியவர்களும், அதற்கு ஒத்துழைப்பு கொடுத்த இடுக்கி மாவட்ட நிர்வாகமும் தான்,இந்த விடயத்தில் முதல் குற்றவாளி. கூடுதலாக என் மனைவி, என் மக்கள், என் சுற்றம் என எல்லாவற்றையும் விட, மாமனிதர் கர்ணன் பென்னி குயிக் கட்டிய பேரணையான முல்லைப் பெரியாறு அணையே எனக்கு எல்லாம். களத்தில் என்னை இறக்கி விட்டு விடாதீர்கள் மலையாள இயக்கவாதிகளே. இடுக்கி மாவட்டத்தில் இதே நிலை தொடருமானால் லோயர்கேம்பில் உள்ள எங்களுடைய ஆசானின் மணிமண்டபத்தில் நாங்களும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குவோம்.

-ச.பென்னிகுயிக்,

ஒருங்கிணைப்பாளர்-பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம்

மாநிலச் செயலாளர்- தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!