பத்திரப் பதிவில் அரசு கிடுக்குப்பிடி, அச்சத்தில் போலி பத்திர எழுத்தர்கள்

பத்திரப் பதிவில் அரசு கிடுக்குப்பிடி,  அச்சத்தில் போலி பத்திர எழுத்தர்கள்
X

போலி பத்திர பதிவுக்கு அரசு கிடுக்குப்பிடி

போலி பத்திரப் பதிவை தடுக்க அரசு கிடுக்குப் பிடி போட்டுள்ளது, இதனால் யாரும் போலியாக பத்திரப் பதிவு செய்ய முடியாது, அச்சத்தில் போலி பத்திர எழுத்தர்கள் உள்ளனர்.

போலி பத்திரம் தயாரிக்கும் பத்திர எழுத்தவர்கள், வக்கீல்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும். திங்கள் கிழமை முதல் பத்திரம் தயாரிப்பவர்கள் அதில் தங்கள் போட்டோ ஒட்டி முழு முகவரி குறிப்பிட்டிருக்க வேண்டும் என பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

பத்திரப்பதிவுத்துறையில் போலி பதிவுகள், அனுமதியற்ற பதிவுகளை தடுக்க அரசு பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அரசின் 'கிடுக்குப்பிடி' நடவடிக்கைகளால் முறைகேடான பத்திரப்பதிவுகள் முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி திங்கள் கிழமை முதல் பத்திரப்பதிவில் புதிய நடைமுறை அமலுக்கு வரும் என பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

இதன்படி பத்திரங்களை தயார் செய்த பத்திர எழுத்தர் அல்லது வக்கீல் யாராக இருந்தாலும் தங்களது போட்டோ, உரிமம் எண், மொபைல் எண், கையொப்பம் இட வேண்டும்.

பத்திரத்தின் இறுதிப்பக்கத்தில் இரண்டு சாட்சிகள் பெயர், தந்தை பெயர், முகவரி, அடையாள அட்டை, மொபைல் எண் இடம் பெறும். இனிமேல் இந்த வரிசையில் பத்திரத்தை தயாரத்த பத்திர எழுத்தரோ அல்லது வக்கீலோ யார் தயாரித்தார்களோ அவர்களது முழு விவரமும் போட்டோவுடன் இடம் பெற்று இருக்க வேண்டும்.

வரும் ஆகஸ்ட் திங்கள் கிழமை முதல் இந்த முழுவிவரம் இல்லாத பத்திரங்கள் பதிவு செய்யப்பட மாட்டாது. போலி ஆவணம் தயாரித்தால் அது பத்திர எழுத்தரோ, வக்கீலோ அவர்கள் மீதும் நடவடிக்கை பாயும். அதற்காகவே இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது என பத்திரபதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
ai solutions for small business