கனடா தூதரக அதிகாரி வெளியேற்றம்
பைல் படம்
கனடாவில் உள்ள சீக்கியத் தலைவரும் காலிஸ்தான் ஆதரவாளருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன் மாதம் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார்.
இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், இந்திய தூதரக உயர் அதிகாரியை கனடாவைவிட்டு வெளியேற அந்நாட்டு அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்தியாவுக்கான கனடா தூதரக உயர் அதிகாரி கேமரூன் மேக்கேவை நேரில் ஆஜராக மத்திய வெளியுறவுத் துறை சம்மன் வழங்கியிருந்தது.இதனைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் ஆஜரான கேமரூனை 5 நாள்களுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu