தேனியில் சீரான விலையில் விற்பனையாகும் காய்கறிகள்

தேனியில் சீரான விலையில் விற்பனையாகும் காய்கறிகள்
X

தேனி உழவர்சந்தையில் காய்கறிகள் வாங்கும் பொதுமக்கள்.

தேனி உழவர் சந்தையில் ஓரிரு காய்கறிகளை தவிர இதர காய்கறிகளின் விலை சீரான நிலையில் உள்ளது.

தேனி மாவட்டம் தோட்டக்கலை மாவட்டம். இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகள் கேரளா, மதுரை, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சி, சென்னை கோயம்பேடு உள்ளிட்ட மார்க்கெட்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்காக தேனி மாவட்டத்தில் தேனி, கருவேல்நாயக்கன்பட்டி, நாகலாபுரம், தேவாரம், கூடலுார் பகுதியில் பெரும் அளவில் காய்கறி மார்க்கெட்டுகள் உள்ளன. இங்கிருந்து தினமும் சராசரியாக 200 டன்களுக்கும் அதிகமான காய்கறிகள் வெளிமார்க்கெட்டுகளுக்கு செல்கின்றன. தவிர உள்ளூர் மார்க்கெட்டிலும் இதே அளவில் விற்பனை நடக்கிறது.

காய்கறிகள் விளைச்சல் நல்ல முறையில் இருந்ததாலும், விலைகள் சீராகவே இருந்து வருகிறது. கடந்த ஆறு மாதங்களாகவே காய்கறி பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரிய லாபம் இல்லை என்ற நிலை காணப்பட்டாலும், நஷ்டம் என கூற முடியாத அளவுக்கு தான் உள்ளூர் மார்க்கெட் நிலவரம் இருந்து வருகிறது.

இந்நிலையில் சில நாட்களாக கத்தரிக்காய் கிலோ ரூ.65, பூசணிக்காய் கிலோ ரூ.25, கொத்தமல்லி -60 ரூபாய், வெள்ளைப்பூண்டு - 260 ரூபாய், முருங்கை பீன்ஸ் கிலோ 110, பட்டர்பீன்ஸ் கிலோ ரூ.110, பச்சைபட்டாணி- கிலோ 80 ரூபாய், சோயாபீன்ஸ் - 120 ரூபாய் என விற்கப்படுகிறது.

இதர காய்கறிகளின் விலை சற்று குறைவாகவே உள்ளது. இதர காய்கறிகளின் விலை நிலவரம்

கிலோவிற்கு ரூபாயில்: தக்காளி- 15, வெண்டைக்காய்- 40,

கொத்தவரங்காய்- 24, சுரைக்காய்- 12, புடலங்காய்- 40, பீர்க்கங்காய்- 35, முருங்கைக்காய்- 25, பச்சைமிளகாய் (உருட்டு)- 65, தேங்காய்- 28, உருளைக்கிழங்கு- 18, கருணைக்

ழங்கு- 26, சேப்பங்கிழங்கு- 50,

கருவேப்பிலை- 28, புதினா- 30,

சின்னவெங்காயம்- 40, பெல்லாரி- 20,

வாழைப்பூ- 10, வாழைத்தண்டு- 10,

பீட்ரூட்- 16, நுால்கோல்- 24,

முள்ளங்கி- 27, முட்டைக்கோஸ்- 15,

காரட்- 36, சவ்சவ்- 25, காலிபிளவர்- 20 என விற்கப்படுகிறது.

சில்லரை மார்க்கெட்டில் இதன் விலைகள் 30 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை அதிகமாக விற்கப்படுகிறது.

Tags

Next Story
Sudden Halt in Pongal Package Distribution at Erode East Ration Shops..!