தேனியில் இருந்து கேரளா செல்லும் சாம்பல் பூசணி

தேனியில் இருந்து கேரளா செல்லும் சாம்பல்  பூசணி
X
தேனியில் இருந்து மருத்துவ குணம் கொண்ட சாம்பல் பூசணி கேரளா கொண்டு செல்லப்படுகிறது.

தேனியில் இருந்து தினமும் பல டன் சாம்பல் பூசணி கேரளாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனை கேரள மக்கள் பல்வேறு விதங்களில் உணவுக்கு பயன்படுத்துகின்றனர்.

தேனி மாவட்டத்தில் பல கிராமங்களில் சாம்பல் பூசணி விளைகிறது. தவிர கரூர், பெரம்பலுார், அரியலுார் மாவட்டங்களில் இருந்தும் தேனி மார்க்கெட்டிற்கு சாம்பல் பூசணி கொண்டு வரப்படுகிறது. சீசனுக்கு ஏற்ப ஒரு கிலோ 8 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை விலை போகிறது. ஒரு பூசணி குறைந்தது 4 முதல் 5 கிலோ எடை இருக்கும். இதனால் விவசாயிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும்.

தேனி மாவட்ட மக்கள் இந்த பூசணியை சாம்பாருக்கும், காய்கறி சாலட்டிற்கும், பொறிக்கவும் மட்டும் பயன்படுத்துவார்கள். கேரள மக்கள் இத்துடன் சேர்த்து ஜாம், அல்வா போன்ற இனிப்புகள் செய்யவும் பயன்படுத்துகின்றனர். ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தில் கேரள மக்களின் முக்கிய உணவு பட்டியலில் சாம்பல் பூசணி டிஷ் இடம் பெறும்.

இப்படி பல வகைகளில் சாம்பல் பூசணியை பயன்படுத்துவார்கள்.. இதனால் தேனி மார்க்கெட்டில் இருந்து கேரளாவில் கோட்டயம், சங்கனாச்சேரி, ஆலப்புழா, காயங்குளம், கோழிக்கோடு, மஞ்சேரி, திருச்சூர் பகுதிகளுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது.

இது குறித்து தேனி வியாபாரி அன்பழகன் கூறியதாவது: சாம்பல் பூசணி மிகவும் சிறந்த மருத்துவக் குணம் கொண்டது. உடல் எடைக்குறைப்பு, சர்க்கரை நோய் கட்டுப்பாடு, சிறுநீரக கல்அடைப்பு நீக்குதல், பெண்களின் மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வு காணுதல், ரத்த அழுத்தத்தை சீராக்குதல் போன்ற பல்வேறு பிரச்னைகளை இது சரி செய்யும். கேன்சர் பாதிப்பு வராமலும் தடுக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேனி மாவட்ட மக்கள் சாம்பல் பூசணியை அதிகம் பயன்படுத்துவதில்லை. கேரள மக்கள் அடிக்கடி தங்களது உணவுப்பொருட்களில் இதனை சேர்த்துக் கொள்வார்கள். தற்போது திருவிழா சீசன் என்பதால் விற்பனை நல்ல முறையில் உள்ளது. இவ்வாறு கூறினார்.

Tags

Next Story
கொடுமுடியில் விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகள் செயலாற்றாமல் இருந்ததா