வேலை வாய்ப்பு உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு
தேனி மாவட்டத்தில் வசிக்கும் வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவி தொகை, பெற விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தேனி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது 5 ஆண்டுகள் வரை காத்திருப்போருக்கு அரசு உதவி தொகை வழங்குகிறது.
10ம் வகுப்பு தவறியவர்களுக்கு காலாண்டுக்கு ரூ.600, தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.900, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றோருக்கு ரூ.1200, பட்டம், முதுகலை பட்டம் பதிவு செய்தோருக்கு ரூ.1800 வீதம் 3 ஆண்டுக்கு வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தது ஒரு ஆண்டு நிறைவு செய்தால் போதும். 10ம் வகுப்பிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.1800, பிளஸ்2 பதிவு செய்தவருக்கு ரூ.2250, பட்டதாரிகளுக்கு ரூ.3000 வீதம் 10 ஆண்டுக்கு வழங்கப்படும்.
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு 45 வயதுக்கு மிகாமல், மற்ற பிரிவினர் 40 வயது மிகாமல் இருக்க வேண்டும்.பதிவுதாரர்கள் http:// tnvelaivaaippu.gov.in இணையத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வேலை வாய்ப்பு அலுவலரிடம் வழங்க வேண்டும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu