எலன் மஸ்குக்கு அடிபணியாமல் இந்தியா காட்டிய மாஸ்..!
பைல் படம்
அதில் அவர் அணுகுமுறை Human Resource ஐ பிரதானமாக கொண்ட IT Industry க்கு பெரிதும் மாறுபட்டது, ஒவ்வாதது. ஏனெனில் மனிதவளம் மிகவும் சென்ஸிட்டிவ் ஆன ஒன்று.
ஆம் அவரின் மனப்பான்மை அங்கே இருப்பவர்கள் எல்லாம் வெட்டிப்பயல்கள் என்ற தொனியில், காசு கொடுத்தால் காத்து கிடப்பார்கள் என்று நினைத்து விட்டார். அதனால் உலகம் முழுவதும் இருந்த பாதிப்பேரை ஏற்கனவே வேலையில் இருந்து தூக்கி விட்டார், அதில் உயர் பதவியில் இருந்தவர்களை கூண்டோடு காலி செய்தார். மேலும் நீண்ட நேரம் வேலைபார்க்க தயாராக இருக்க வேண்டும், என்று சொன்னது கூட தவறில்லை, ஆம் மோசமான கால கட்டங்களில் 12 மணி நேரம் வேலை பார்ப்பது என்பது இயல்பு தான். மோசமான காலங்களில் அதை தொழிலாளர்கள் செய்யாவிட்டால் நிறுவனம் மொத்தமாக மூழ்கிவிடும் என்பதை அவர்களும் அறிவர். ஆனால் அவர் அத்தோடு நிற்காமல், அப்படி செயய முடியாது என்றால் வெளியே போ என்ற தொனியில் வீராப்பாக பேசிய பேச்சு, பலரை கோபப்படுத்திவிட்டது.
அதன் விளைவாக வீட்டில் இருந்து வேலை பார்த்த பலர், ஆபீஸ் வந்து, நீயும் வேண்டாம் உன் வேலையும் வேண்டாம் என்று வேலையை உடனே ராஜினாமா செய்தார்கள். அந்தக் கூட்டம் கட்டுக்கடங்காமல் போகவே, சில நாட்கள் ஆபீஸை மூடி வைத்துள்ளார் எலன்மஸ்க். இந்த மூடல் அதை தள்ளிப்போடலாம் ஆனால் தாமதப்படுத்தாது என்பதால், ட்விட்டர் மிக மோசமான நிலையை நோக்கி பயணிப்தாகக்கூறப்படுகிறது.
இந்த ட்விட்டர் முன்பு இந்தியாவை ஒரு நாடாகவே மதிக்கவில்லை, அப்போது நம் சட்டமெல்லாம் தனக்கு பொருந்தாது என்கிற வகையில் சில சட்ட திட்டங்களுக்கு ஒத்துக்கொள்ளாமல் முரண்பட்டது. ஆனால் மோடி அரசு, அதை செய்யாவிட்டால் அனுமதிக்க முடியாது என்கிற நிலைப்பாடுகளை தெளிவுபடுத்திய பின் வேறு வழியின்றி காலக்கெடுவுக்கு ஒத்துக்கொண்டு ட்விட்டர் அதை செய்தது.
அதே எலன் மஸ்கின் டெஸ்லா பேட்டரி கார் உலகத்தின் முன்னோடி. இன்றைய நிலையில் அதற்கு ஈடு செய்ய இன்னொரு நிறுவனத்திடம் உயர் நுட்ப டெக்னாலஜி இல்லை. அந்த நிறுவனத்தினை ஆரம்பிக்க உலகில் உள்ள பல நாடுகள் நான், நீ என்று போட்டி போடுகிறது. அவரின் முதலீட்டுக்காக தவமாய், தவம் இருக்ககிறது. அது போல இந்தியாவும் முதலீடு செய்ய அழைத்தது. இங்கே உற்பத்தி நிலையம் துவங்க வேண்டும் என்று இந்திய அரசின் ஆலோசனையை டெஸ்லா நிராகரித்தது. நான் அமெரிக்காவில் இருந்துதான் பாகங்களை இறக்குமதி செய்வேன், அதற்கு முழு வரி விலக்கு கொடுக்க வேண்டும் என்பது அதன் நிபந்தனையாகவும் கொடுத்தது. காரணம் இந்தியா இல்லாவிட்டால் சீனா உற்பட பல நாடுகள் அதற்கு தயாராக காத்திருக்கிறது. சீனாவில் ஏற்கெனவே அதன் உற்பத்தி நடக்கிறது. அதே வேளையில் உலகின் மிகப்பெரிய மார்க்கெட்டான இந்தியாவை அது இழக்கவும் முடியவில்லை.
ஆனால் மோடி அரசு அதற்கு அடிபணியவில்லை. அதனால் தனது இந்திய முதலீட்டை நிறுத்திவிட போவதாக பயமுறுத்தியது. அதன் மூலம் கடந்த கால அனுபவபங்களின் படி, இந்தியா மீண்டும் வந்து காலில் விழும் என்பது அவரின் எதிர்பார்ப்பு. ஆனால் இந்தியா அதற்கு செவி சாய்க்கவில்லை. அதே சமயம் டாட்டா போன்ற உள்நாட்டு நிறுவனங்கள் பேட்டரி காரில் முதலீடுகளை பெருமளவில் உயர்த்தியது, மட்டுமல்ல, அதன் உற்பத்தியை தேவையை பூர்த்தி செய்ய முடியாத அளவிற்கு பேட்டரி கார்களின் டிமாண்ட் உயர்ந்தது. அந்த டிமாண்ட் என்பது உலகத்தின் மிகப்பெரிய எதிர்காலம் என்பதால் அதை யாரும் தவிர்க்க முடியாத சூழல், அதற்கு டெஸ்லாவும் விதிவிலக்கல்ல.
அதே சமயம் இந்தியாவின் வளர்ச்சி என்பது உலகின் அடுத்த டெக்னாலஜி முனையம் என்பதாக மாறிவருகிறது. அதனால் உலகமே Recession ல் மூழ்கி கொண்டிருக்க்க, இந்தியா தனியாக வளர்கிறது. புதிய முதலீடுகளும், ஆராய்ச்சிகளும், Start up கம்பெனிகளும் மிகப்பெரிய அளவில் பெருகி வருகின்றன. அதில் பேட்டரி ஆராய்ச்சி நிறுவனங்களும் பெருமளவில் பெரிய முன்னேற்றங்களை சாதிக்க துவங்கியுள்ளன. திருப்பதியில் அப்படி ஒரு பெரிய ஆராய்ச்சி சார்ந்த உற்பத்தி நிறுவனம் சமீபத்தில் பெரிய அளவில் உற்பத்தியை தொடங்கியது நினைவிருக்கலாம்.
அது மட்டுமே காரணம் என்றால் அது தவறாகிவிடும். உலகளவில் ஏற்படும் GeoPolitics -ல் ஏற்பட்ட மாற்றம் இன்னும் பலருக்கு புரியவில்லை. கொரோனா காலத்தில மிக மோசமான காலகட்டத்தில் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி, மருந்து பொருட்கள், கோதுமை போன்றவை பெருமளவில் தேவைப்பட்டது. அப்போது அமெரிக்கா, என் நாட்டு மக்களின் உயிர்தான் முக்கியம் என்று தடுப்பூசியை வழங்க மறுத்தது. அல்லது சீனா அவை அதிக விலைக்கு கொடுக்க முன்வந்தது. ஆனால் அந்த ஏழை நாடுகள் வாங்க அதன் பொருளாதாரம் அனுமதிக்கவில்லை.
அப்போது இந்தியா மனிதாபிமானத்தோடு தடுப்பூசி, மருந்து, உணவு பொருட்கள் என்று இலவசமாக ஆப்ரிக்க நாடுகளுக்கு தந்து உதவியது. அது மட்டுமல்லாமல் சீனாவின் கடன்களால் கடும் நெருக்கடிக்கு உள்ளான அந்த நாடுகளில் ஏராளமான லித்தியம் கனிம வளங்கள் உள்ளது. அதை வாங்கிய கடனுக்கு எப்படி ஹம்பந்தோட்டா துறைமுகத்தை எழுதி வாங்கியதோ, அது போல எழுதி கொடுக்க வற்புறுத்தியது சீனா. அந்த நாடுகள் நீண்டகால அடிப்படையில் அமெரிக்கா போன்ற நாடுகள் நிபந்தனையற்ற கடன் கொடுக்க முன்வராத போது, இந்தியா குறைந்த வட்டிக்கு கடன் கொடுத்து உதவியது.
இந்தியா தடுப்பூசிகளை கொடுத்திருக்கா விட்டால், அமெரிக்க நாடுகள் கொள்ளை விலைக்கு விற்று அந்த நாடுகளை திவால் ஆக்கியிருக்கும், அல்லது வழக்கம் போல அந்த கனிம வளங்களை தன் வசப்படுத்தும் சூழல் இருந்தது. அப்படித்தான் அமெரிக்கா ஆப்ரிக்க நாடுகளின் கனிம வளத்தையும், மனித வளத்தையும் காலம் காலமாக சுரண்டி அதை ஏழை நாடுகளாகவே வைத்திருந்தன. அதையே இப்பொழுது சீனாவும் செய்து வந்த வேளையில், இந்தியாவின் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளால் அந்த அரசும், நாட்டு மக்களும் மனதார இந்தியாவிற்கு நன்றி கூறினர். .
நன்றிக்கடனாக அந்த நாடுகள் இப்போது தங்கள் கனிம வளத்தை இந்தியாவிற்கு கொடுக்க முன்வந்துள்ளன. அதன் மூலம் இந்தியா உயரும், உயர்ந்தால் அமெரிக்கா, சீனா போல அல்லாமல் அந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த இந்தியா அவர்களுக்கு உதவும் என்பதையும் நன்கு புரிந்து கொண்டன. அந்த நாடுகளின் லித்தியம் கனிம வளம் பேட்டரி கார்களை உற்பத்தி செய்ய பெரிதும் உதவும் என்பதாலும், இந்தியாவில் உள்ள வளமான ஆராய்ச்சி செய்யும் திறனால், டெஸ்லாவிற்கு பெரிய மாற்றாக வந்து விடும் என்று தீர்க்கமாக நம்புகிறது. அது நடக்கும் பட்சத்தில் இன்று ட்விட்டர் போல, டெஸ்லாவும் நாளை சூனியமாகலாம். அதை இந்தியா ஏற்கெனவே விண்வெளி உள்பட பல துறைகளில் நிரூபித்தும் உள்ளது. எனவே டெஸ்லா வேறு வழியில்லாம இப்போது தனது உற்பத்தியை இந்தியாவில் தொடங்க பேச்சு வார்த்தகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
உலகளவில் சிறந்த மனித வளங்களை திருடி தனது ஆதிக்கத்தை டெக்னாலஜியில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் தளர்வதற்கு இது ஒரு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. இதில் அமெரிக்காவின் போயிங் விமானம், ஏர்பஸ் முதலீட்டுக்கு பின் ஏற்பட்ட மாற்றங்கள் எனக்கூறலாம். இதை அவ்வளவு எளிதாக விடுவார்களா?!? அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து, ஜெர்மனி உள்பட பல நாடுகள் மோடியை 2024 தேர்தலில் வீழ்த்தியே ஆக வேண்டும் என்று கடும் முயற்சிகளை செய்து கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை நாம் நம்பமுடியாது என்றாலும், இது எளிதில் கடந்து செல்லக்கூடிய செய்தியாக இருக்காது என்பதே நிதர்சனம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu