நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பு அகற்ற புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பு அகற்ற  புரட்சிகர சோசலிஸ்ட்  கட்சி வலியுறுத்தல்
X

தேனியில் நடந்த புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள்.

தேனி மாவட்டம் முழுவதும் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பாதுகாக்க வேண்டும் என புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

மாவீரன் பகத்சிங் வீரவணக்க நாளை முன்னிட்டு தேனியில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் சார்பில் வீரவணக்க நிகழ்ச்சி நடந்தது.

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாநில பொறுப்பு செயலாளர் பி.எஸ்.அரிகரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜதுரை முன்னிலை வகித்தார். தேனி நகர செயலாளர் மாடசாமி, ஒன்றிய செயலாளர் முருகானந்தம் உட்பட பலர் பங்கேற்றனர்.சி.பி.ஐ., எம்.எல்., ரெட்ஸ்டார் கட்சியின் முன்னாள் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மாவட்டம் முழுவதும் இருந்து 150 பேர் புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

தொடர்ந்து நடந்த ஆலோசனை கூட்டத்தில், தேனி மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு தகுதி உடையவர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags

Next Story