போடி மெட்டு அருகே குடியிருப்புகளுக்குள் புகுந்த காட்டுயானை

போடி மெட்டு அருகே குடியிருப்புகளுக்குள்  புகுந்த காட்டுயானை
X

போடி மெட்டு அருகே தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்த காட்டுயானை.

போடி மெட்டு அருகே காட்டு யானை தேயிலை தோட்டங்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்தது.

தேனி மாவட்டம், கேரள எல்லையில் உள்ள போடி மெட்டில் இருந்து 6 கி.மீ., தொலைவில் கேரளாவிற்குள் அமைந்துள்ளது தோண்டிமலை கிராமம். இங்கு பெரும்பாலும் தமிழர்களே வசிக்கின்றனர். இங்கு ஏலத்தோட்டங்களும், தேயிலை தோட்டங்களும் அதிகம். அடர்ந்த வனப்பகுதியாக இருப்பதால் இங்கு யானைகளும் அதிகம்.

இப்பகுதியில் தேயிலை தோட்டங்களுக்குள் புகுந்த காட்டுயானை, குடியிருப்பு பகுதிகளுக்கும் உலா வந்தது. ரோட்டில் நீண்ட நேரம் நின்றிருந்தது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஒற்றை யானை என்பதால் சற்று ஆக்ரோசம் காட்டும் என யாரும் அருகில் செல்லவில்லை.

வனத்துறையினர் வந்து சாதுர்யமாக யானையின் நடைபாதையை திசை திருப்பி, வனத்திற்குள் அனுப்பி வைத்தனர். சில மணி நேரம் சுற்றித்திரிந்த யானை தோட்டங்களையோ, குடியிருப்புகளையோ சேதப்படுத்தவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!