தேனியில் தொடங்கியது தேர்தல் ரேஸ்
தேனி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் நாராயணசாமி, தி.மு.க., வேட்பாளர் தங்க.தமிழ்செல்வன், அ.ம.மு.க., வேட்பாளர் தினகரன்.
தேனி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் வி.டி.நாராயணசாமி, தி.மு.க., சார்பில் தங்க.தமிழ்செல்வன், அ.ம.மு.க., சார்பில் டி.டி.வி.தினகரன் களம் இறங்குகின்றனர். மூன்று அணிகளின் வேட்பாளர்களும் முடிவு செய்யப்பட்டு விட்டதால், கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பரபரவென தேர்தல் வேலைகளை தொடங்கி உள்ளனர்.
மூன்று அணிகளின் தரப்பிலும் தேர்தல் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தேனி தொகுதியை பொறுத்தவரை கிட்டத்தட்ட சமபலம் நிலவி வருகிறது. மூன்று வேட்பாளர்களும் அ.தி.மு.க.,வின் வழிவந்தவர்கள். இப்போது தான் பிரிந்து ஒருவரை ஒருவர் எதிர்த்து களம் காண்கின்றனர். முந்தைய தேர்தல்களில் ஒருவர் மற்றவரை ஜெயிக்க வைக்க தேர்தல் பணி செய்தவர்கள்.
ஒவ்வொருவரின் தேர்தல் வியூகங்களும், தேர்தல் கள பணித்திறனும் மற்றவர்களுக்கு தெரியும். இருப்பினும் இப்போது எதிரெதிர் களத்தில் நிற்கின்றனர். அ.தி.மு.க., வேட்பாளரும், அ.ம.மு.க., வேட்பாளரும் அசுர பண பலம் கொண்டவர்கள். தங்க.தமிழ்செல்வனுக்கு தி.மு.க., கை கொடுத்துள்ளது. பணம், மக்கள் சக்தி, கட்சிகளின் சக்தி என சமபலத்தில் இருப்பதால், தேனி இப்போது ஸ்டார் தொகுதி அந்தஸ்த்தை பெற்றுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu