தேனி தேர்தல் பார்வையாளரிடம் புகார் செய்யும் நேரம் அறிவிப்பு

தேனி தேர்தல் பார்வையாளரிடம்  புகார் செய்யும் நேரம் அறிவிப்பு
X
தேனி தேர்தல் பார்வையாளரிடம் எப்போது புகார் செய்யலாம் என்ற விவரத்தை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

தேனி மாவட்ட தேர்தல் பார்வையாளராக எ.சங்கர் ஐ.ஏ.எஸ்., நியமிக்கப்பட்டுள்ளார். இவரை தினமும் மாலை 4 மணி முதல், 5 மணி வரை பொதுமக்கள் கலெக்டர் அலுவலக டிராவலர்ஸ் பங்களாவில் அறை எண் 4ல் நேரடியாக சந்தித்து புகார் செய்யலாம்.

புகாரை, 9442548572 என்ற அலைபேசி நம்பரில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தேர்தல் தொடர்பான புகார்களை மட்டுமே தெரிவிக்க வேண்டும் என கலெக்டர் முரளீதரன் அறிவித்துள்ளார்.

Tags

Next Story
தேய்பிறை அஷ்டமி விழா கோலாகலம்: மல்லசமுத்திரம் காலபைரவர் கோயிலில் சிறப்பு வழிபாடு